சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டோல்கேட் முற்றுகை போராட்டம் அனைத்து கட்சிக்கூட்டத்தில் முடிவு

Added : டிச 03, 2019
Advertisement

திருமங்கலம், டகப்பலுார் டோல்கேட் திருமங்கலத்திலிருந்து 500 மீட்டர் துாரத்திலும் கப்பலுார் ரிங்ரோடு பாலத்தில் இருந்து 30 மீட்டர் துாரத்திலும் அமைந்துள்ளது. நெடுஞ்சாலை விதிகளின்படி, நகராட்சி எல்லையில் இருந்து 5 கி.மீ., கடந்தும் மேம்பாலத்தில் இருந்து 1 கி.மீ., கடந்தும் டோல்கேட் அமைக்கப்பட வேண்டும்.இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் வேம்பு வேந்தன் கூறுகையில், '' திருமங்கலம் வழியாக பேரையூர், கல்லுப்பட்டி, ராஜபாளையம், தென்காசி பகுதிகளுக்கு செல்லும் பாதையை தனியாக ஒதுக்காமல், அந்த வாகனங்களிடமும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் இந்த பகுதி வாகனங்கள் செல்ல தனி பாதை உள்ளது என நெடுஞ்சாலைத்துறை சார்பில் பிராமண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் திருமங்கலம் பகுதி வாகனங்களுக்கு 2012ல் இருந்து கட்டணம் வசூல் செய்யப்படாத நிலையில், தற்போது தினமும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் கேட்கின்றனர்,'' என்றார்.நேற்று மாலை நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் 'டிச., 5 முதல் டோல்கேட்டை அகற்றும் வரை தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவது' என முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X