பொது செய்தி

இந்தியா

மழையால் பழுதான சாலைகளில் ரூ.1 கோடியில் 'பேட்ஜ் வொர்க்': அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

Added : டிச 03, 2019
Advertisement
 மழையால் பழுதான சாலைகளில் ரூ.1 கோடியில் 'பேட்ஜ் வொர்க்': அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி:வடகிழக்கு பருவ மழை பாதிப்புகளை சரி செய்வதற்கு, மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில், பொதுப்பணித் துறை செயலர் சுர்பிர் சிங், உள்ளாட்சித் துறை செயலர் அசோக்குமார், கலெக்டர் அருண், உள்ளாட்சித் துறை இயக்குனர் மலர்கண்ணன், நகராட்சி ஆணையர் கந்தசாமி, பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் மகாலிங்கம், மின்துறை கண்காணிப்புப் பொறியாளர் முரளி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தை தொடர்ந்து, அமைச்சர் நமச்சிவாயம் அளித்த பேட்டி:பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதும், ரெயின்போ நகர், இந்திராகாந்தி சதுக்கம், மரப்பாலம் சந்திப்பு போன்ற இடங்களில் மழை நீர் தேங்கியது. இந்த இடங்களில் மழை நீர் தேங்காமல் தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதற்கான பணிகள் ஜனவரி இறுதிக்குள் துவக்கப்பட உள்ளது.இந்திராகாந்தி சதுக்கத்துக்கு வருகின்ற மழை நீரை கட்டுப்படுத்தும் வகையில், பாவாணர் நகரில் இருந்து தண்ணீர் உழந்தை ஏரிக்கு திருப்பி விடப்பட உள்ளது. ரெயின்போ நகரில் தண்ணீர் தேங்காமல் எளிதாக வடிவதற்கு வசதியாக புதிதாக 'யு' வடிவ வாய்க்கால் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும், அந்த பகுதியில் வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள், கோர்ட்டில் தடை ஆணை பெற்றுள்ளனர். தடையை விலக்குவதற்கு சட்டப் படியான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளோம்.மேலும், மழையால் சேதமடைந்துள்ள பொதுப் பணித் துறைக்கு சொந்தமான அனைத்து சாலைகளையும் புதுப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளோம். 'பேட்ஜ் வொர்க்' மேற்கொள்ளவும், பெரிய பள்ளங்களை சரி செய்யவும் ரூ.1 கோடி அளவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.மழைக்காலம் முடிந்தவுடன், பொதுப்பணித் துறை சாலைகளை புதிய தாக போடுவதற்கு திட்ட மிட்டுள்ளோம்.
இந்த பணிக்கு 80 கோடியில் இருந்து, 90 கோடி வரை பணம் தேவைப்படுவது குறித்து முதல்வரிடம் கேட்டுள்ளோம்.திருத்திய மதிப்பீட்டில் பணம் ஒதுக்குவதாக முதல் வர் தெரிவித்துள்ளார். பணம் வந்தவுடன் பணிகள் துவக்கப்படும்.எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியை 2 கோடி ரூபாயாக உயர்த்தி தர உள்ளோம். இதற்கு கவர்னர் அனுமதி தந்தவுடன், தொகை கிடைக்கும். இதன் மூலம், உள்ளாட்சி அமைப்புகளின் சாலைகளையும் புதுப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X