நிதிக் குழுவில் சேர்க்க குரல் எழுப்ப வேண்டும்: சோனியாவுக்கு காங்., எம்.எல்.ஏ., கடிதம்

Added : டிச 03, 2019
Advertisement
 நிதிக் குழுவில் சேர்க்க குரல் எழுப்ப வேண்டும்: சோனியாவுக்கு காங்., எம்.எல்.ஏ., கடிதம்

புதுச்சேரி:'புதுச்சேரியை 15வது நிதிக் குழுவில் சேர்ப்பதற்கு, பார்லிமெண்டில் குரல் எழுப்ப வேண்டும்' என, காங்., தலைவர் சோனியாவிற்கு, முதல்வரின் பார்லிமெண்ட் செயலர் லட்சுமிநாராயணன் கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் கூறியிருப்பதாவது:புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக, பார்லிமெண்ட் நடப்பு கூட்டத்தில் காங்., சார்பில் குரல் எழுப்ப வேண்டும். பார்லிமெண்டில் இந்த விஷயத்தை, அனைத்து எதிர்கட்சிகளின் ஆதரவுடன் காங்., கட்சி எழுப்ப வேண்டும்.மேலும், புதுச்சேரி அரசு, அனைத்து கட்சியினர் மற்றும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, புதுச்சேரியை 15வது நிதிக்குழுவில் சேர்க்க வேண்டும் எனவும் காங்., கட்சி சார்பில் பார்லிமெண்டில் வலியுறுத்த வேண்டும்.15வது நிதிக்குழு தொடர்பாக, மத்திய அரசு சில முடிவுகளை எடுக்க திட்ட மிட்டுள்ளது. எனவே, இந்த நேரத்தில் நிதிக் குழுவில் புதுச்சேரியை சேர்க்க வலியுறுத்த வேண்டும்.குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே வளங்கள் உள்ளதால், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி பற்றாக்குறையால் புதுச்சேரி மாநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நிதியாதாரத்தை உயர்த்துவதற்கு சிரமத்தை எதிர்நோக்கி உள்ளது. 15வது நிதிக் கமிஷனில் புதுச்சேரியை சேர்ப்பதன் மூலமாக, மற்ற மாநிலங்களை போல புதுச்சேரிக்கு கூடுதல் நிதியுதவி கிடைக்கும்.எனவே, ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன், நடப்பு பார்லிமெண்ட் கூட்டத் தொடரில் குரல் எழுப்ப வேண்டும். இந்த வாய்ப்பை தவற விட்டால், புதுச்சேரி மக்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். அடுத்த நிதிக் குழுவில் சேர்க்க வேண்டும் என கேட்பதற்கு 5 ஆண்டுகள் காத்திருக்க நேரிடும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கடிதத்தின் நகல் ராகுல், லோக்சபா காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, ராஜ்யசபா காங்., தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X