புதுச்சேரி:முத்தரையர்பாளையம் இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், டெங்கு கொசுவை கண்டறிந்து அழிக்கும் சிறப்பு முகாம் முத்தரையர்பாளையத்தில் நடந்தது.
கலெக்டர் அருண் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் டெங்கு கொசுப் புழுவை கண்டறிந்து அழிக்கும் முகாம் 'டிரை டே' என்ற பெயரில் வாரத்தில் ஒரு நாள் பின்பற்றி வருகிறது. அதன்படி இளங்கோ அடிகள் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் மாணவர்கள், மேட்டுப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு கொசுப் புழுவை கண்டறிந்து அழிக்கும் பணியில் ஈடுப்பட்டனர்.பள்ளி துணை முதல்வர் தனஞ்செல்வன் நேரு தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், என்.எஸ்.எஸ்., மாணவர்கள் டெங்கு கொசுவை அழித்தனர்.ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., அதிகாரிகள் சாந்தி, சதீஷ், ஆகியோர் செய்திருந்தனர்.