இந்தியா

ஒதுக்கீடு! புதுச்சேரிக்கு கூடுதலாக 57.24 மெகாவாட் மின்சாரம்...என்.எல்.சி., புதிய மின் நிலையங்கள் மூலம் கிடைக்கும்

Updated : டிச 03, 2019 | Added : டிச 03, 2019
Advertisement
 ஒதுக்கீடு! புதுச்சேரிக்கு கூடுதலாக 57.24 மெகாவாட் மின்சாரம்...என்.எல்.சி., புதிய மின் நிலையங்கள் மூலம் கிடைக்கும்

புதுச்சேரி:என்.எல்.சி.,யின் புதிய அனல் மின்நிலையம் மூலம் புதுச்சேரி மாநிலத்திற்கு கூடுதலாக 57.24 மெகாவாட் மின்சாரம் கிடைக்க உள்ளது

.கடலுார் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தில் முதல் மின் நிலையம் 50 ஆண்டு களை கடந்து செயல்பட்டு வருகிறது.இதற்கு மாற்றாக, ரூ.7,000 கோடியில் தலா 500 மெகாவாட் மின் உற்பத்தி திறனுள்ள இரு பிரிவுகளுடன் புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.கடந்த நான்கு ஆண்டு களாக நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது ஒவ்வொரு பிரிவாக சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இந்த புதிய அனல் மின்நிலையத்தில் இருந்து தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு மின்சாரம் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. அதன்படி புதிய அனல் மின் நிலைய உற்பத்தியில் 57.24 மெகா வாட் மின்சாரம் புதுச்சேரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த மின்சாரம் விரைவில் புதுச்சேரிக்கு கிடைக்க உள்ளது.

புதுச்சேரி மாநில மின்தேவைக்காக ஏற்கனவே மத்திய மின் தொகுப்பில் இருந்து 523 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது கூடுதலாக 57.24 மெகா வாட் மின்சாரம் கிடைக்க உள்ளதால், மாநிலத்திற்கான மின் ஒதுக்கீடு 580.24 மெகா வாட்டாக உயர்கிறது.கூடுதலாக கிடைக்க உள்ள மின்சாரத்தை கொண்டு காரைக்கால் பிராந்தியத்தின் மின்தேவையை பூர்த்தி செய்ய மின் துறை திட்டமிட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

நெய்வேயில் இருந்து 57.24 மெகா வாட் மின்சாரத்தை புதுச்சேரி மாநிலத்திற்கு தடையின்றி கொண்டு வர 'பவர் கிரிட்' கார்ப்பரேஷனுடன் புதுச்சேரி மின் துறை நீண்ட கால ஒப்பந்தம் புரிய உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X