பொது செய்தி

தமிழ்நாடு

கழிவுகளில் இருந்து மாற்று தயாரித்து சிறப்பு மைய குழந்தைகள் அபாரம்

Added : டிச 03, 2019
Advertisement
 கழிவுகளில் இருந்து மாற்று தயாரித்து சிறப்பு மைய குழந்தைகள் அபாரம்

கோவை:மாவட்ட தேசிய குழந்தை தொழிலாளர் தடுப்பு திட்டத்தில், கோவை மாவட்டத்தில் சுந்தராபுரம், காமராஜ் நகர், அன்னுார், வெள்ளலுார், தொண்டாமுத்துார் உட்பட, 10 சிறப்பு மையங்களில், 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.இம்மைய குழந்தைகளின் திறன் வளர்ப்பு விழா மற்றும் கைவினைப்பொருட்களின் கண்காட்சி, கோவை காவலர் பயிற்சி பள்ளி, பி.ஆர்.எஸ்., கூட்டரங்கில் நடந்தது; தேசிய குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு திட்ட மண்டல அலுவலர் விஜயக்குமார் தலைமை வகித்தார்.பாரதியார் பல்கலை மகளிரியல் துறை இயக்குனர் ஜெனிட்டா ரோஸ்லின் பேசுகையில், ''குழந்தை தொழிலாளர்களை பார்த்து பரிதாபப்படுவதை விட, 'சைல்டு லைனை' தொடர்புகொண்டு, அவர்களின் கல்விக்கான முதல் முயற்சியை மேற்கொள்ளலாம். கல்வியால் மட்டுமே குழந்தை தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்ற முடியும்,'' என்றார்.தீக்குச்சி, ஐஸ் குச்சி, தேங்காய் ஓடு, ஸ்ட்ரா, காகிதம், வாட்டர்கேன் போன்ற கழிவுப்பொருட்களில் இருந்து மாணவர்கள் செய்த கைவினை பொருட்கள் கண்காட்சியை, காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் தென்னரசு துவக்கி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X