பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 10ல் தபால்துறை குறைதீர் கூட்டம்

Added : டிச 03, 2019
Advertisement

கோவை:மண்டல அளவிலான தபால் துறை சார்ந்த குறைதீர் கூட்டம், வரும் 10ம் தேதி நடக்கிறது.கோவை கோட்ட முதுநிலை தபால்கண்காணிப்பாளர் சுதிர் கேபால் ஜாக்கரே கூறியதாவது:மேற்கு மண்டல அளவிலான தபால்துறை சார்ந்த குறைதீர் கூட்டம், வரும் 10,காலை 11:00 மணியளவில், ஆர்.எஸ்.புரம், மேற்கு மண்டல தலைமை தபால் அலுவலகத்தில் நடக்கிறது. பொதுமக்கள் தபால்துறை சார்ந்தபுகார்களை, கூட்டத்தில் நேரில் தெரிவித்து, நிவர்த்தி செய்துகொள்ளலாம்.நேரில் வர முடியாதவர்கள், தங்களது புகார்களை, வரும் 5ம் தேதிக்குள், 'உதவி இயக்குனர் (தபால்), தபால் துறை தலைவர், மேற்கு மண்டலம், கோவை - 641002' என்ற முகவரிக்கு அனுப்பலாம். தபால் உறையில், 'தாக் அதாலத் கேஸ்' என எழுதுவது அவசியம்.அனுப்பும் புகார்களில், முழு விவரங்களும் குறிப்பிட வேண்டும். பதிவு தபால், விரைவு தபால், மணி ஆர்டர் ஆகியவற்றுக்கு பதிவு தபால் எண், பதிவு செய்யப்பட்ட அலுவலகம், விலாசம் குறிப்பிட வேண்டும்.தபால் சேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீடு தொடர்பான புகார்களுக்கு கணக்கு எண், பாலிசி எண், வைப்புத்தொகையாளரின் பெயர், முகவரி, தபால் நிலையத்தின் பெயர், பணம் செலுத்தப்பட்ட விபரம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X