பொது செய்தி

தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர்களே... வெரிகுட்! 'இன்ஸ்பயர்' விருது போட்டியில் சரிபாதி

Added : டிச 03, 2019
Advertisement

கோவை:'இன்ஸ்பயர்' விருதுக்கான போட்டியில் பங்கேற்க, செயல்திட்டங்கள் அனுப்பியவர்களில், 104 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 59 பேர் அரசுப்பள்ளிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் சார்பில், 'இன்ஸ்பயர் மானாக் ஸ்கீம்' என்ற பெயரில், ஆண்டுதோறும் கண்காட்சி நடத்தப்படுகிறது.இதில் பங்கேற்கும் மாணவர்கள் செயல்திட்ட முன்னுரையோடு, பதிவு செய்யும் பட்சத்தில், தகுதிவாய்ந்த திட்டங்களை படைப்புகளாக்க, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்.இதற்கு விண்ணப்பிக்க, கடந்த ஆக., வரை அவகாசம் வழங்கப்பட்டது. பள்ளி வாரியாக சிறந்த படைப்புகள், இணையதள முகவரியில் (www.inspireawards-dst.gov.in) பதிவேற்றப்பட்டன.இதில், தமிழகம் முழுக்க, 2 ஆயிரத்து 302 மாணவர்களின் செயல்திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.கோவையில் மட்டும் 104 பேர், போட்டிக்கு தகுதியானவர்களாக தேர்வாகியுள்ளனர். அரசுப்பள்ளியில் இருந்து, 59 மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இம்மாணவர்கள் படைப்புகளை உருவாக்கி காட்சிப்படுத்த, மாவட்ட அளவிலான கண்காட்சி, விரைவில் அறிவிக்கப்படும்.அரையாண்டு தேர்வு வரும் 11ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு விடுமுறைக்கு பின், கண்காட்சி நடத்தினால், செயல்திட்டம் உருவாக்க கால அவகாசம் இருக்கும் என்பது, ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.தமிழகம் முழுக்க, 2 ஆயிரத்து 302 மாணவர்களின் செயல்திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கோவையில் மட்டும் 104 பேர், போட்டிக்கு தகுதியானவர்களாக தேர்வாகியுள்ளனர். அரசுப்பள்ளியில் இருந்து, 59 மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X