மாநில கபடி போட்டி: வேலந்தாவளம் முதலிடம்

Added : டிச 03, 2019
Advertisement

கோவை:மாநில அளவிலான கபடி இறுதிப்போட்டியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேலந்தாவளம் கொலம்பியா அணி, முதலிடத்தை தட்டி சென்றது.வேலந்தாவளம் வி.எல்.சி., கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, முதலாம் மாநில அளவிலான கபடி போட்டி, முனியப்பன் கோவில் மைதானத்தில் நடந்தது.ஈரோடு, திருப்பூர், சேலம், தேனி, கோவை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, 46 அணிகள் பங்கேற்றன.
போட்டிகள் அனைத்தும், 'நாக்- அவுட்' முறையில் நடந்தன.முதல் அரையிறுதிப்போட்டியில், திருப்பூர் டால்பின் அணி, 28-17 என்ற புள்ளி கணக்கில், நியூ செவன் ஸ்டார் அணியையும்; 2வது போட்டியில், வேலந்தாவளம் கோலம்பியா அணி, 32-28 என்ற புள்ளி கணக்கில், ஜூனியர் போராளி அணியையும் வென்றன.பரபரப்பான இறுதிப்போட்டியில், வேலந்தாவளம் கொலம்பியா அணி, திருப்பூர் டால்பின் அணிகள் மோதின.ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய, வேலந்தாவளம் கொலம்பியா அணி, 39-26 என்ற புள்ளி கணக்கில், திருப்பூர் டால்பின் அணியை வென்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பரிசுப்பொருட்கள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X