ஓம்முருகா அணி... என்ன ஒரு பிடி! சப்- ஜூனியர் மாணவர் கபடியில் சாம்பியன்| Dinamalar

ஓம்முருகா அணி... என்ன ஒரு பிடி! சப்- ஜூனியர் மாணவர் கபடியில் சாம்பியன்

Added : டிச 03, 2019

கோவை:மாவட்ட அளவிலான கபடி போட்டியில், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய, கணுவாய், ஓம்முருகா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.கோவை மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் மற்றும் ஹரி ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து நடத்தும் சப்- ஜூனியர் மாணவர்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டி, தடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. 36 அணிகள் பங்கேற்றன.முதல் காலிறுதிப்போட்டியில், ஹரி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 24-12 என்ற புள்ளி கணக்கில், ஐ.சி.சி., ஸ்போர்ட்ஸ் கிளப் அணியையும்; 2வது போட்டியில், பேரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 31-19 என்ற புள்ளி கணக்கில், லைப் ஸ்போர்ட்ஸ் அணியையும் வென்றன.3வது காலிறுதிப்போட்டியில், பி.ஜெ., பிரதர்ஸ் அணி, 21- 14 என்ற புள்ளி கணக்கில், சாய் வித்யநிகேதன் பள்ளி அணியையும்; 4வது போட்டியில், ஓம்முருகா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, 33- 24 என்ற புள்ளி கணக்கில், பி.என்.பாளையம் சிவானந்தா பள்ளி அணியையும் வென்றன.முதல் அரையிறுதிப்போட்டியில், பி.ஜெ., பிரதர்ஸ் அணி, 39-19 என்ற புள்ளி கணக்கில், ஹரி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியையும்; 2வது போட்டியில், ஓம்முருகா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 28-17 என்ற புள்ளி கணக்கில் பேரூர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியையும் வென்றது.இறுதிப்போட்டியில், ஓம்முருகா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 41- 29 என்ற புள்ளி கணக்கில் பி.ஜெ., பிரதர்ஸ் அணியை வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X