ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் காலியிறுதியில் ஸ்ரீகுரு கல்லுாரி

Added : டிச 03, 2019
Advertisement

கோவை:இன்ஜி., கல்லுாரி ஆசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீகுரு கல்லுாரி அணி, 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, காலியிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.கோவை மாவட்டத்தில், ஜோன்- 9, 10, 11 என, மூன்று மண்டலங்கள் கீழ், 100க்கும் மேற்பட்ட இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகள் உள்ளன.இக்கல்லுாரியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான, 'யுனைடெட் கோப்பை' கிரிக்கெட் போட்டி, பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் தொழில்நுட்ப கல்லுாரியில் நடந்தது. 19 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் அனைத்தும், 10 ஓவர் அடிப்படையில் நடத்தப்பட்டன.போட்டியில், ஸ்ரீராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி அணி, கே.பி.ஆர்., ஸ்ரீகுரு, அண்ணா பல்கலை மண்டல வளாகம் அணி, கற்பகம் இன்ஜி., அணி, கலைஞர் கருணாநிதி கல்லுாரி, கிரைஸ்ட் தி கிங் அணிகள் காலியிறுதிக்கு தகுதி பெற்றன.ஸ்ரீகுரு கல்லுாரி அணி, இந்துஸ்தான் இன்ஜி., தொழில்நுட்ப கல்லுாரி அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஸ்ரீகுரு கல்லுாரி அணி, 10 ஓவரில், ஒரு விக்கெட் இழப்புக்கு, 111 ரன் எடுத்தது.அடுத்து களமிறங்கிய இந்துஸ்தான் அணி, 10ஓவரில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 67 ரன் எடுத்தது. ஸ்ரீகுரு கல்லுாரி அணி, 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X