பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கேபிள் 'டிவி' கட்டணம் குறைந்தது; பயன்படுத்த அழைப்பு

Added : டிச 03, 2019
Advertisement

கோவை:'அரசு கேபிள் டிவி கட்டணம் குறைந்துள்ளதோடு, இணைப்பு வழங்குவதும் எளிதாகியுள்ளது. அதனால் அரசு கேபிள் இணைப்புகளை மக்கள் பயன்படுத்த முன்வர வேண்டும்,'' என அரசு கேபிள் டிவி தாசில்தார் அருள்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அரசு கேபிள் 'டிவி'க்கு மாதம்தோறும் கட்டணமாக, 190 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது.சில இடங்களில் 320 ரூபாய் வரை கூட வசூலித்தனர். இந்நிலையில், அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் கேபிள் கட்டணத்துக்கான, ஜி.எஸ்.டி.யை 154 ரூபாய் ஆககுறைத்துள்ளது.இத்தகவல் தெரியாத பலரும், 'அரசு கேபிள் டிவி கட்டணம் அதிகம்' என்ற எண்ணத்திலேயே, தனியார் டிவி சேனல்களை பயன்படுத்துகின்றனர். இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாகவும், தற்போது, தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி, கேபிள் டிவி இணைப்புக்கான கட்டணத்தை குறைத்துள்ளதாகவும் கூறுகிறார், கேபிள் டிவி தாசில்தார் அருள்முருகன்.அவர் கூறியதாவது:முழுமையான டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன், அரசு கேபிள் டிவி ஒளிபரப்பப்படுகிறது. இதன் வாயிலாக ஒளி, ஒலி துல்லியமாக உள்ளது. இடையூறுகள் இல்லை. தனியாரிடம் உள்ள தொழில் நுட்பத்தை காட்டிலும், அரசு கேபிள் டிவி.,க்கு நிறைய தொழில்நுட்பங்கள் உள்ளே புகுத்தப்பட்டுள்ளன.அதனால் மக்கள் விரும்புகின்றனர். கேபிள் இணைப்பு தேவைப்படுபவர்கள், அந்தந்த ஏரியா கேபிள் ஆபரேட்டரை அணுகலாம். தேவைப்படுபவர்கள் என்னை, 949800 2569 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X