பொது செய்தி

தமிழ்நாடு

வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

Added : டிச 03, 2019
Advertisement

கோவை:கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள், நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.கோவை கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்க, 2018- 19 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. இதில், தலைவருக்கு ஐயப்பன், திருஞானசம்பந்தம், விஜயகுமார், செயலாளருக்கு கிருஷ்ணமூர்த்தி, லோகநாதன், துணை தலைவருக்கு இளங்கோவன், கண்ணன், பொருளாளருக்கு கவுதமன், ராஜமாணிக்கம், வினோத்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.இவர்களில், தலைவராக விஜயகுமார், செயலாளராக கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவராக கண்ணன், பொருளாளராக கவுதமன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இணை செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்று கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X