பற்றி எரியுது பஞ்சு; மூச்சு விட சிரமப்படுது நெஞ்சு!

Added : டிச 03, 2019
Advertisement

பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் மக்கள் அவதி

சுகாதார சீர்கேடுபுலியகுளம், பெரியார் நகர், ஆசிரியர் காலனி, மகளிர் ரேஷன் கடை எதிரில், சாக்கடை கால்வாய் அடைப்பால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- ரமேஷ்குமார், ஆசிரியர் காலனி.

வாகன ஓட்டிகள் அவதிதிருச்சி ரோடு, சிங்காநல்லுார் சந்திப்பில், மலை நேரங்களில், சாலையின் பாதி அளவு மழைநீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது; வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- விஜயகுமார், சிங்காநல்லுார்.

சும்மா கிடக்கும் குழாய்கள்திருச்சி ரோடு, ராமநாதபுரம், ஒலம்பஸ் பகுதியில், நடைபாதை மற்றும் சாலையோரம் நீண்ட நாட்களாக வைக்கப்பட்டுள்ள குழாய்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- பாலசண்முகம், ராமநாதபுரம்.

இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்ரத்தினபுரி, முத்துக்குமார் நகரில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில், இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன; துர்நாற்றம் வீசுகிறது. இவற்றை உண்ண வரும் நாய்கள் சாலையில் அங்கும் இங்கும் ஓடுவதால், வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர்.-கிருஷ்ணா, முத்துக்குமார் நகர்.

சேறும் சகதியுமானசாலையால் அவதிமாநகராட்சி, 32வது வார்டுக்கு உட்பட்ட, விளாங்குறிச்சி, டி நகர் பகுதியில் உள்ள பிரதான சாலை, மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது.- பிரேம், விளாங்குறிச்சி.

விளக்கு எரிவதில்லைபோத்தனுார், காந்திஜி ரோடு, பாரதி நகர் முதல் வீதியில் உள்ள, மின் கம்பத்தில்(எண்: 35), பல மாதங்களாக விளக்கு எரிவதில்லை.- அருண்குமார், பாரதி நகர்.

பணியை துவக்க வேண்டும்அவிநாசி ரோடு, நவஇந்தியா பகுதியில், பாதியில் நிறுத்தப்பட்டுள்ள, சாலை செப்பனிடும் பணியை துவக்கி, விரைவில் முடிக்க வேண்டும்.- ஸ்ருதி, நவஇந்தியா.

கழிவு பஞ்சு எரிப்பால் திணறுது மூச்சுவிளாங்குறிச்சி ரோடு, பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில், கழிவு பஞ்சுகள் மூட்டைகளில் கட்டப்பட்டு சாலையோரம் குவிக்கப்பட்டுள்ளன. இவ்வழியே செல்வோர், இதற்கு தீ வைத்து எரிப்பதால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.- பிரேமலதா, தண்ணீர்பந்தல்.

மின் கம்பத்தை சீரமைக்கணும்அவிநாசி ரோடு, சின்னியம்பாளையம், கரூர் வைஸ்யா வங்கி எதிரில், சென்டர் மீடியனில் வைக்கப்பட்டுள்ள மின் கம்பம், சிதிலமடைந்து சாய்ந்துள்ளது.-காளீஸ்வரன், சின்னியம்பாளையம்.

பணியாளர்கள் வருவதில்லைகவுண்டம்பாளையம், தேவி கார்டனில், துப்புரவு பணியாளர்கள் வராததால், சாலையோரம் குப்பை குவிந்துள்ளது; சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.- தேவசேனா, தேவி கார்டன்.

தார் சாலை அமைக்க வேண்டும்பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி, ஸ்ரீஅம்மன் நகரில், சாலை வசதி இல்லாததால், மழை காலங்களில் இங்குள்ள மண் சாலை சேறும் சகதியுமாக மாறி, நடக்கக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது.- முருகவேல், ஸ்ரீஅம்மன் நகர்.

வெளிச்சம் தேவைேஹாப்ஸ் - சிங்காநல்லுார் செல்லும் காமராஜ் ரோடு, லயன்ஸ் கிளப் சந்திப்பில், எல்இடி விளக்குகள் பொருத்தி ஒரு மாதமே ஆன நிலையில், கடந்த பத்து நாட்களாக எரிவதில்லை.- ரவிகுலதிலகம், காமராஜ் ரோடு.

ஆபத்தான மின்கம்பம்சிங்காநல்லுார், 63வது வார்டுக்கு உட்பட்ட, கள்ளிமடை நடுவீதியில், சிமென்ட் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை, மாற்றி அமைக்க வேண்டும்.- மணிகண்டன், கள்ளிமடை.

ஆக்கிரமிப்பு வாகனங்களால் அவதிதிருச்சி ரோடு, ராஜலட்சுமி மில்ஸ் பஸ் ஸ்டாப்பில் இருந்து, கள்ளிமடை செல்லும் வழியில், சாலையோரம் 'நோ பார்க்கிங்' அறிவிப்பு வைத்திருந்தும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் பார்க் செய்யப்படுகின்றன.- குமார், சிங்காநல்லுார்.

போர்வெல் தண்ணீர் வருவதில்லைசிவானந்தபுரம், சங்கரா கண் மருத்துவமனை ரோட்டில் உள்ள குடியிருப்பு பகுதியில், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக போர்வெல் தண்ணீர் வருவதில்லை; மக்கள் அவதிப்படுகின்றனர்.- அனிதா, சிவானந்தபுரம்.

சாக்கடை கால்வாய் அடைப்புசீரநாயக்கன்பாளையம், ராஜேந்திர பிரசாத் முதல் வீதியில், சாக்கடை கால்வாய் சிதிலமடைந்து, கழிவுநீர் செல்ல வழியின்றி உள்ளது; கால்வாயை செப்பனிட வேண்டும்.-ஐஸ்வர்யா, ராஜேந்திர பிரசாத் வீதி.

குதிரைகளால் தொல்லைமாநகராட்சி, 76வது வார்டுக்கு உட்பட்ட, தெலுங்குபாளையம் புதுார் பகுதியில், சாலையில் சுற்றித்திரியும், குதிரைகளால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.-ரவீந்திரன், தெலுங்குபாளையம்.

துர்நாற்றம் வீசுதுபோத்தனுார், ஆஸ்பெஸ்டாஸ் ரோட்டில், பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் தேங்குகிறது. இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.- ஜான், அன்னை தெரசா லே-அவுட்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X