அவலுார்பேட்டை,:மேல்மலையனுார் மற்றும் சுற்றுப் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தொரப்பாடி கிராமத்தில் பொழிந்த மழையினால் அங்குள்ள குளம் நிரம்பியது. கரை புரண்டு ஓடிய குளத்து நீர் அப்பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.வெள்ள நீர் 22 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மூழ்கின. வேளாண் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, விவசாயிகளுக்கு தேவையான நிவாரணத்தை வழங்க வேண்டும்.
Advertisement