பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.கே.டி.,பள்ளியில் 'தினமலர்' வினாடி வினா!

Added : டிச 03, 2019
Advertisement

கோவை;'தினமலர்' மாணவர் பதிப்பான, பட்டம் இதழ் சார்பில் மெகா வினாடி வினா போட்டியின் காலிறுதி சுற்று, கோவை பள்ளிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.'தினமலர்', கோவை அமிர்தாவிஸ்வ வித்யாபீடம் கல்வி நிறுவனம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்.,கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும், இந்த மெகா வினாடி வினா போட்டி, நேற்று பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், 300 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில், தேர்வு செய்யப்பட்ட 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் முன்னிலையில், காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.இதில், 'பி' அணியைச் சேர்ந்த தர்ஷன், நரேன்விக்னேஷ் ஆகியோர், வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர்.வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்றவர்களுக்கு, பள்ளியின் நிர்வாக செயலர் பிரசன்னா ராதாகிருஷ்ணன், முதல்வர் சித்ரா ஆகியோர் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளியின் துணை முதல்வர் இந்திரா, ஆசிரியைகள் ரேவதி, சித்ரா, ஜெயந்தி, கீதா, யசோதா, தமிழ்செல்வி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.ஏ.பி.சி.,மெட்ரிக் பள்ளிபீளமேட்டில் உள்ள ஏ.பி.சி.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த, தகுதிச்சுற்றுக்கான பொது அறிவுத்தேர்வு போட்டியில், மொத்தம் 150 மாணவர்கள் தேர்வு எழுதினர். தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு காலிறுதி சுற்றுக்கான வினாடி வினா போட்டி நடந்தது.இதில், 'ஹெச்' அணியைச் சேர்ந்த ஆதவன், தர்னிஷ் ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர்.வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு, அப்பள்ளியின் செயலாளர் விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர் ஜனனி ஆகியோர் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, முதல்வர் ராம்தாஸ் ஒருங்கிணைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X