பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவர்கள் சந்திக்கும் மனநலம் சார்ந்த கருத்தரங்கு

Added : டிச 03, 2019
Advertisement

கோவை:மனநலம் மற்றும் நரம்பு அறிவியலுக்கான பாக்யலட்சுமி ஆறுமுகம் இன்ஸ்டிடியூட்(பிமான்ஸ்), அமெரிக்காவின் ஸ்டேட்டன் ஐலண்ட் பல்கலை மருத்துவமனை சார்பில், இளம்பருவ மாணவர்கள் மனநலம் குறித்த, சர்வதேச கருத்தரங்கு கோவையில் நடந்தது.இக்கருத்தரங்கில், ஸ்டேட்டன் ஐலண்ட் பல்கலை மருத்துவமனை மனோவியல் துறை முதுகலை கல்வி இயக்குனர் டிமோதி சலிவன், குழந்தைகள் மற்றும் வயது வந்தோர் மனநலத்துறை இயக்குனர் பெங் பேங், நியுயார்க் பல்கலை ஆராய்ச்சி பேராசிரியர் டெர்ட்ராண்ட் வின்ஸ்பர்க், சென்னை தி பான்யன் அமைப்பின் இயக்குனர் கிேஷார் குமார் ஆகியோர், 'பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் மன நலம் தொடர்பான பிரச்னைகள் குறித்தும், மனநல சேவை அளிப்போர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் பேசினர்.சாஷி இளங்கோவன் அறக்கட்டளை தலைவர் நடராஜன் இளங்கோவன் கூறுகையில், ''எங்கள் அறக்கட்டளையின் நிதியுதவியுடன், கோவையில் அதிநவீன மனநல மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.கோவை கே.எம்.சி.எச்., தலைவர் நல்லா ஜி பழனிசாமி, கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன், கற்பகம் மருத்துவமனை டீன் அன்பு அறவாழி, கே.எம்.சி.எச்., டீன் குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X