பொது செய்தி

தமிழ்நாடு

நிலம் அபகரிப்பு மூதாட்டி புகார் மனு

Added : டிச 03, 2019
Advertisement

விழுப்புரம்:நிலத்தை பட்டா மாற்றம் செய்து அபகரிக்க முயன்றவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி மனு கொடுத்தார்.

விழுப்புரம் அடுத்த ராகவன்பேட்டையைச் சேர்ந்தவர் தாமோதரன் மனைவி சாந்தா, 70; கொடுத்துள்ள மனு:என் கணவருக்கு பாகப்பிரிவினை மூலம் கிடைக்கப்பெற்ற 70 சென்ட் நிலம் என்னுடைய அனுபவ பாத்தியத்தில் உள்ளது. எனக்கு உடல்நிலை சரியில்லாததால், தேவைகளை பூர்த்தி செய்ய என் நிலத்தை விற்பனை செய்ய முயன்றேன்.அப்போது, எங்கள் நிலத்தை ஏழுமலை மனைவி தவமணி என்பவர் தனது பெயரில் பட்டா செய்துள்ளது தெரியவந்தது. மேலும், எனது மகள்களுடன் சேர்ந்து எனது நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றார். எனவே, தவமணி செய்துள்ள பட்டா மாற்றத்தை ரத்து செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X