பொது செய்தி

தமிழ்நாடு

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

Added : டிச 03, 2019
Advertisement

கோவை:தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் துவக்கிவைத்த பேரணியானது, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் துவங்கி, அரசு மருத்துவமனையில் நிறைவடைந்தது. முன்னதாக எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசார வாகனத்தில், கையெழுத்திடுதல் மற்றும் எச்.ஐ.வி., பாதிப்புடன் வாழ்பவர்களை புறக்கணிக்க கூடாது என, உறுதிமொழி எடுக்கபட்டது.இதில், பல்வேறு கல்லுாரிகளை சேர்ந்த, 200க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர். 'பாதுகாப்பான ரத்த தானம் செய்ய வேண்டும்', 'எய்ட்ஸ் வரும் முன் காப்போம்' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, ஏந்தியவாறு பேரணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X