பொது செய்தி

தமிழ்நாடு

கண்ணொளி பரிசோதனை மையம் காணொளி மூலம் முதல்வர் திறப்பு

Added : டிச 03, 2019
Share
Advertisement
கண்டமங்கலம்:தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று சிறுவந்தாடு கண்ணொளி பரிசோதனை மையத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.கண்டமங்கலம் அடுத்த சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்ணொளி பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் கண்ணொளி
 கண்ணொளி பரிசோதனை மையம் காணொளி மூலம் முதல்வர் திறப்பு

கண்டமங்கலம்:தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று சிறுவந்தாடு கண்ணொளி பரிசோதனை மையத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
கண்டமங்கலம் அடுத்த சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்ணொளி பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.முதல்வர் பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் கண்ணொளி பரிசோதனை மையத்தை திறந்து வைத்தார்.
இதையொட்டி சிறுவந்தாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரண்யா சேவையை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் கண்ணொளி பரிசோதகர் மாலதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கர், சமுதாய நல செவிலியர் பூங்கொடி, சுகாதார ஆய்வாளர் சமரேசன், பகுதி சுகாதார செவிலியர் சிவகாமி, கிராம சுகாதார செவிலியர் சக்தி, மோட்டசகுளம் ஊராட்சி செயலர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X