பொது செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கியுடன் பஸ் பயணம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
துப்பாக்கியுடன் பஸ் பயணம்திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை சேர்ந்த குணசேகரன்,28, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலுள்ள ரிசார்ட்டில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, காந்திபுரம்- தஞ்சை செல்லும் தனியார் பஸ்சில் ஏறிய போது, அவரது இடுப்பில் கை துப்பாக்கி இருந்ததை டிரைவர் பார்த்து விட்டார். பஸ்சில் துப்பாக்கியுடன் வரக்கூடாது என்றதால், அவர்களுக்கிடையே தகராறு

துப்பாக்கியுடன் பஸ் பயணம்திருவாரூர் மாவட்டம், வலங்கைமானை சேர்ந்த குணசேகரன்,28, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலுள்ள ரிசார்ட்டில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, காந்திபுரம்- தஞ்சை செல்லும் தனியார் பஸ்சில் ஏறிய போது, அவரது இடுப்பில் கை துப்பாக்கி இருந்ததை டிரைவர் பார்த்து விட்டார். பஸ்சில் துப்பாக்கியுடன் வரக்கூடாது என்றதால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. துப்பாக்கி வைத்திருந்த குணசேகரனை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரித்த போது, அவர் வைத்திருந்தது 'ஏர்பிஸ்டல்' என்பது தெரிந்தது. இருப்பினும் அவரை எச்சரித்து அனுப்பினர்.குவிந்த மலையாள மீடியாக்கள்மேட்டுப்பாளையம் நடூரில் சுற்றுச்சுவர் விழுந்து 17 பேர் பலியான சம்பவம் குறித்து கள செய்தி சேகரிக்க, கேரள மாநிலத்திலிருந்து ஏராளமான செய்தியாளர்கள் கோவையில் நேற்று குழுமியிருந்தனர். இதில் பெரும்பாலான ஆங்கில செய்தி சேனல்களும் இடம் பெற்றிருந்தன. அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டு துளைத்தெடுத்தனர். அதிகாரிகள் பொறுமையாக பதிலளித்தனர்.ஸ்தம்பித்த சிறு சாலைகள்திருச்சி சாலையில் நடைபெறும் பாலம் கட்டுமானப்பணிக்கு, ராட்சத கிரேன் பயன்படுத்துவதால், சில நேரங்களில் அவ்வழியே போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. அப்போது பைக் மற்றும் ஸ்கூட்டரில் செல்லும் நபர்கள், திருச்சி சாலையை தவிர்த்து குறுக்குச்சாலைகளை பயன்படுத்துவதால் சிறிய சாலைகள் கூட, வாகன எண்ணிக்கையால் நிரம்பி வழிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X