சங்கராபுரம்:சங்கராபுரத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.சங்கராபுரம் பகுதியில் உலக அமைதிக்காகவும், மக்கள் நலன் வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. சங்கராபுரம் ராமாயி எழிலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார்.வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ்,பெற்றோர் ஆசிரியர் கழகதலைவர் குசேலன், மாநில இணைச்செயலர் ஜனனி முன்னிலை வகித்தனர். கல்யாணி வரவேற்றார்.வள்ளலார் மன்ற பூசகர் சிவஞான அடிகள் முன்னிலையில் அகவல் படித்து சிறப்பு பிரார்த்தனை நடந்தது.ரோட்டரி முன்னாள் தலைவர் முர்த்தி, வெங்கடேசன்,நெடுஞ்செழியன், ராதாகிருஷ்ணன், பாபுஉட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE