பொது செய்தி

தமிழ்நாடு

கலைப்பொருளாகும்

Added : டிச 03, 2019
Share
Advertisement
உலகம் தோன்றி மனித நாகரிகம் முன்னேற்றம் கண்டு, கற்களை ஆயுதங்களாகவும், தீ மூட்ட பயன்படுத்தியது கற்காலம். அறிவும், அனுபவமும், நாகரிகமும் வளர்ச்சியடைந்த பின், உலோகக்காலம் வந்தது.அறிவில் தலைசிறந்து, யூகிக்க முடியாத அளவு வளர்ச்சியடைந்த நிலையில், பிளாஸ்டிக் காலத்தில் உள்ளோம். இது மனித குலத்தை மட்டுமின்றி, பல்லுயிர்களின் அழிவுக்கும் வித்திடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்,
 கலைப்பொருளாகும்

உலகம் தோன்றி மனித நாகரிகம் முன்னேற்றம் கண்டு, கற்களை ஆயுதங்களாகவும், தீ மூட்ட பயன்படுத்தியது கற்காலம். அறிவும், அனுபவமும், நாகரிகமும் வளர்ச்சியடைந்த பின், உலோகக்காலம் வந்தது.அறிவில் தலைசிறந்து, யூகிக்க முடியாத அளவு வளர்ச்சியடைந்த நிலையில், பிளாஸ்டிக் காலத்தில் உள்ளோம். இது மனித குலத்தை மட்டுமின்றி, பல்லுயிர்களின் அழிவுக்கும் வித்திடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன், கடைகளுக்கு பொருட்கள் வாங்க, மஞ்சப்பை, துணிப்பை கொண்டு செல்வது வழக்கம்.மாயமான மஞ்சப்பைகாலப்போக்கில், மஞ்சப்பை கலாசாரம் மாறி, பிளாஸ்டிக் கவர் கலாசாரம் தலைதுாக்கியுள்ளது. துணிப்பைகளை மறந்ததன் விளைவு, இப்போது பார்க்கும் இடமெல்லாம் நிலப்பரப்பில் பிளாஸ்டிக் படலம் படர்ந்துள்ளது.1950 முதல் 1970 வரையில் பிளாஸ்டிக் பயன்பாடு, சொற்ப அளவிலேயே இருந்தது. 1990களில் பிளாஸ்டிக் பயன்பாடும், தயாரிப்பும் கணிசமான அளவு அதிகரித்து, 2000ம் ஆண்டுகளில் அதிகரித்தது. இன்றோ, பிளாஸ்டிக் இல்லாத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது.மறுசுழற்சியில்லைஐ.நா., சபையின் சுற்றுச்சூழல் அமர்வின் அறிக்கையின் படி, உலகம் முழுவதிலும் ஆண்டுதோறும், 3,000 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியாகிறது. இந்தியாவில், தினமும், 26 ஆயிரம் டன்னுக்கும் அதிகமாக பிளாஸ்டிக் கழிவுகள் வெளியாவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.வெளியேறும் கழிவுகளில், மண்ணையும், பல்லுயிர்களையும் பாதிக்கும் வகையிலான, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகள், 50 சதவீதம் உள்ளது. நாம் வெளியேற்றும் ஒட்டுமொத்த கழிவுகளில், 30 சதவீதம் கூட மறு சுழற்சி செய்ய முடியாத நிலையே நீடிக்கிறது.உலகுக்கே ஆபத்துவனத்தில் வீசும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு காட்டுயிர்கள் பரிதாபமாக மரணிக்கிறது. கடல் முழுவதிலும் பரவி, கடல்வாழ் உயிர்ச்சூழலும் பாதிக்கிறது. மண்ணில் படலம் போல பரவும் கழிவுகளால், மழைநீரை நிலத்தினுள் நுழையவிடாமல் தடுப்பதால், நிலத்தடி நீர் அதல பாதாளத்துக்கு செல்கிறது. இப்படி பல வகைகளில், ஒட்டுமொத்த உலகத்துக்கும், உயிர்களுக்கும் பிளாஸ்டிக் பேராபத்தாக உள்ளது.இந்நிலையில், உலக அளவில் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வு மேலோங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழக அரசு, ஒரு முறை பயன்படுத்தும், 15 வகையான பிளாஸ்டிக் கழிவுகள் பயன்பாட்டுக்கு தடை விதித்தது.இதனால், பிளாஸ்டிக் பயன்பாடு கணிசமாக குறைந்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை வீசியெறியாமல், பயனுள்ள வகையில் பயன்படுத்தவும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.கலைப்பொருட்கள்சமீபத்தில், பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், 'நேட்டிவ் மெடிகேர் சாரிடபிள் டிரஸ்ட்' மற்றும் பள்ளி சார்பில், 'பிளாஸ்டிக் மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி' கண்காட்சி நடத்தப்பட்டது. இதில், பங்கேற்ற மாணவர்கள், பிளாஸ்டிக் பொருட்களில், பல வகை பொருட்கள் தயாரித்து அசத்தினர்.வாட்டர் பாட்டில்கள், எண்ணெய் பாட்டில்களில், வர்ணம் தீட்டி,கார்டூன்களில் வரும் 'மிக்கி மவுஸ்', பொம்மைகள் உள்பட பலதும் தயாரித்தனர். வீட்டில் டிவி, அலமாரிகளில் வைக்கும் வகையிலான, பூச்செடிகள், கூடைகள், பேனாக்கள் வைக்கும் ஸ்டாண்ட், பூக்கள் என, எண்ணத்தில் உதித்ததை கைவண்ணத்தில் வடிவமைத்து இருந்தனர்.இப்படி பல கலை பொருட்கள் தயாரிப்பதால், பிளாஸ்டிக் கழிவுகளை நாம் வெளியில் வீசுவதை தவிர்க்க முடியும். அழிந்துவரும் இயற்கையை காக்க முடியும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.'யூ டியூப்'ல் பிளாஸ்டிக் மறு பயன்பாடு குறித்து எண்ணற்ற வீடியோக்கள் உள்ளன. அவற்றின் மூலம், பிளாஸ்டிக் கழிவுகளில் கைவினை பொருட்கள் தயாரிக்க கற்றுக்கொள்ளலாம். தற்போது, சந்தைகளிலும் கூட, இப்படியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கையை பாதுகாக்க, கழிவுகளை வீசி எறியாமல் கலைப்பொருட்களாக மாற்றி, புவியை காக்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X