சங்கராபுரம்:சங்கராபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆய்வு செய்தார்.சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் சமைக்கப்படும் சத்துணவு தரமானதாக உள்ளதா. முட்டை, சுண்டல் போன்றவை முறையாக வழங்கப்படுகிறதா. சத்துணவு தரமானதாக உள்ளதா என மாணவர்களுக்கு சமைத்து வைக்கப்பட்டுள்ள சத்துணவை பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன் சாப்பிட்டு பார்த்தார். ஆய்வின் போது ஆசிரியர்கள் வேல்முருகன், முனுசாமி உடனிருந்தனர்.