பொது செய்தி

தமிழ்நாடு

வால்பாறையில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு: முழுமையாக அகற்ற மக்கள் வலியுறுத்தல்

Added : டிச 03, 2019
Advertisement

வால்பாறை:வால்பாறை நகரில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புக்களை, முழுமையாக அகற்ற வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.வால்பாறை நகரில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க, நகராட்சி அலுவலகத்தில் இருந்து காந்திசிலை பஸ் ஸ்டாண்ட் வரை நடைபாதை அமைக்கப்பட்டது. இங்கு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கடை வைத்து நடத்தி வந்தவர்களின் கடைகளை, நகராட்சி அதிகாரிகள் கடந்த, 25ம் தேதி, போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினர். அந்த வியாபாரிகளுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில் மாற்று இடம் வழங்கப்பட்டது. எனினும், இன்னும் சில இடங்களில், ஆக்கிரமிப்புகள் அப்படியே உள்ளன.இதுகுறித்து வால்பாறை மக்கள் கூறியதாவது,வால்பாறை நகர் ஒரு கி.மீ.,சுற்றளவில் அமைந்துள்ளது. மிகவும் குறுகலான ரோட்டில் தான் வால்பாறை - பொள்ளாச்சி ரோடு அமைந்துள்ளது. இதில், இருபுறமும் ஆக்கிரமிப்பு கடைகளும், வாகனங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ரோட்டின் நடந்து செல்பவர்களும் விபத்தில் சிக்கி தவிக்கின்றனர். எனவே, வால்பாறை போஸ்ட் ஆபீஸ் முதல் புதிய பஸ் ஸ்டாண்டு வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற, அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X