பொது செய்தி

தமிழ்நாடு

தென்னை, வாழை, தக்காளிக்கு மானியம்:அரசுக்கு சிறு, குறு விவசாயிகள் வலியுறுத்தல்

Added : டிச 03, 2019
Advertisement

பொள்ளாச்சி:கரும்பு சாகுபடிக்கு கூடுதல் மானியம் வழங்க உத்தரவிட்டது போல், தென்னை, வாழை மற்றும் தக்காளி சாகுபடிக்கு, சொட்டு நீர் பாசன செலவை அதிகரிக்க வேண்டும் என, சிறு, குறு விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.மானாவாரி விவசாயிகளும், ஆழ்துளை கிணறு அமைத்து, சொட்டு நீர் பாசனத்தில் தக்காளி, வெங்காயம் மற்றும் செடி அவரை சாகுபடி மேற்கொண்டு, வருவாயை பெருக்க துவங்கியுள்ளனர். இதற்கு முக்கிய காரணம், அரசு வழங்கும் மானியம்.தமிழக அரசும் சொட்டு நீர், நுண்ணீர் பாசனம் மூலம் சாகுபடி பரப்பை அதிகரிக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக வேளாண், தோட்டக்கலைதுறைகளை முடுக்கி விட்டுள்ளது.அதிகாரிகளும், சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகளை சந்தித்து, சொட்டு நீர் பாசனம் அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். 25 சதவீத விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் அமைக்க, உடனே சம்மதிக்கின்றனர்.பெரும்பாலான விவசாயிகள், 100 சதவீத மானியமாக இருந்தாலும், குறிப்பிட்ட கம்பெனிகளில் தான் உபகரணங்கள் வாங்க வேண்டும் என வலியுறுத்துவதாலும், மானியத்தை மீறி, செலவு செய்ய வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்படுவதாலும், மறுத்துவிடுகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: தக்காளி உள்ளிட்ட பயிர்களுக்கு குறுகிய இடைவெளியில் பாசனம் வழங்க வேண்டும். இதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மாறாக, கூடுதலாக செலவிட அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், 100 சதவீத மானியம் என்பது, அடிபட்டு போகிறது. இதற்காகவே, சிறு, குறு விவசாயிகள் மானியத்தை மறுத்துவிடுகின்றனர். இதனால், ஒவ்வொரு ஆண்டும், சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்தும், அதிகாரிகளால் இலக்கை எட்ட முடிவதில்லை.உற்பத்தி செலவு, உபகரண செலவுகள் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயித்த செலவு தொகையை உயர்த்தாமல் இருப்பதும் அரசின் சலுகையை விவசாயிகள் மறுப்பதற்கு காரணமாகும். எனவே, சொட்டு நீர் பாசனத்துக்கான மொத்த செலவு தொகையை அதிகரிக்க வேண்டும். சமீபத்தில், கரும்பு சாகுபடிக்கு செலவு மற்றும் மானியம் அதிகரித்தது போல, தென்னை, வாழை சாகுபடிக்கும் அதிகரித்தால், சாகுபடி பரப்பளவு அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X