பொள்ளாச்சி:பொள்ளாச்சி, நுாலகம் கிளை எண்.1ல், நிலவேம்பு கஷாயம் வினியோகிக்கப்பட்டது.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவம் மற்றும் நுாலகத்துறை சார்பில், நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி, கிளை எண். 1 நுாலகத்தில் நேற்று நடந்தது.அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் விஜயராகவன் தலைமை வகித்து, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், அதனை கட்டுப்படுத்தும் முறை, கொசு உற்பத்தி கட்டுப்படுத்தும் முறை குறித்து விளக்கி பேசினார்.அரசு வக்கீல் சம்பத்குமார், விழாவை துவக்கி வைத்தார். அதில், நுாலகத்துக்கு படிக்க வந்த வாசகர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது. நுாலகர்கள் ஷரிப், மதியரசன் பங்கேற்றனர்.