பொது செய்தி

தமிழ்நாடு

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி

Added : டிச 03, 2019
Advertisement
 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சி

சங்கராபுரம்:சங்கராபுரத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.

கிராம ஊராட்சிகளில் வரும் 27 மற்றும் 30ம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.

தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் பிரபாகர், வட்டார கல்வி அலுவலர்கள் ஞானப்பூ, ரங்கநாதன் ஆகியோர் ஆகியோர் வரும் 6ம் தேதி முதல் கிராமங்களில் வேட்பு மனுக்கள் பெறும் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.பயிற்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X