வாகனங்களால் மார்க்கெட் ரோட்டில் கடும் நெருக்கடி

Added : டிச 03, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி, காந்தி மார்க்கெட் ரோட்டில், தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பொள்ளாச்சி நகராட்சி, காந்தி மார்க்கெட் ரோட்டில், இருபுறமும், மீன் கடைகள், இறைச்சி கடைகள் என, 70க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. நாளுக்கு நாள் கடைகள், முன் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்கள் மீதும் அமைக்கப்பட்டதால், ரோடு குறுகலாக மாறிவிட்டது.கடந்த சில மாதங்களுக்கு முன், நகராட்சி அதிகாரிகள் காந்தி மார்க்கெட் பகுதியில், ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றிக்கொள்ள அறிவுறுத்தினர். கால அவகாசமும் வழங்கினர்.மேலும், அந்த கால அவகாசத்துக்குள் எடுக்காத ஆக்கிரமிப்புகளை, நகராட்சி அதிகாரிகள் அகற்றியதுடன், ரோட்டை விரிவாக்கி, புதிய தார் சாலையும் அமைத்தனர்.மேலும், 100 அடி சாலையாக உள்ள இந்த ரோட்டில், 'சென்டர் மீடியன்' அமைத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.இந்நிலையில், வாகனங்களை இந்த ரோட்டில் தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் செல்லும் பகுதியில், சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் மீண்டும் நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X