நெடுஞ்சாலையில் இரட்டை 'பார்க்கிங்' அறிவிப்பு பலகையை மதிப்பதில்லை

Added : டிச 03, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், நெரிசல் மிக்க தேசிய நெடுஞ்சாலையில், 'நோ பார்க்கிங்' விதிகளை காற்றில் பறக்க விட்டு, கார்கள் இரட்டை 'பார்க்கிங்' செய்யப்படுவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.பொள்ளாச்சி - கோவை ரோட்டில், காந்தி சிலை சிக்னலில் இருந்து, மகாலிங்கபுரம் ஆரச் வரை, நெரிசல் மிக்க பகுதியாக உள்ளது. நெரிசலை தவிர்க்க, இங்குள்ள கடைகளுக்கு முன்பு கார்கள் நிறுத்த தடை விதித்து, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.ஆனால், போலீஸ் அறிவிப்பு பெயரளவுக்கு மட்டுமே உள்ளது. அறிவிப்பு பலகைக்கு அருகிலேயே, ரோட்டை ஆக்கிரமித்து கார்கள் நிறுத்தப்படுகின்றன. அதிலும், ஒன்றுக்கு அருகே ஒன்று என, இரட்டை கார்கள் அடுத்தடுத்து நடு ரோடு வரை நிறுத்தப்படுகின்றன.ஆண்டுக்கணக்கில் தொடரும் இந்த விதிமீறலால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் கோவை ரோட்டில், நாள் முழுக்க நெரிசல் நிலவுகிறது. பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் வரும் போது, அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.அப்பகுதியில் உள்ள ஒரு சில கடைக்காரர்களின் நலனுக்காக, ஒட்டு மொத்த மக்களையும் அவதிக்குள்ளாக்கும் இந்த அவலத்தை, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X