பொது செய்தி

தமிழ்நாடு

தக்காளி விலை உயர்வு: தொடர் மழை காரணம்

Added : டிச 03, 2019
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில், தக்காளி வரத்து குறைவு காரணமாக, 12 கிலோ எடையுடன் கூடிய தக்காளி பெட்டி ஒன்று, அதிகபட்சமாக 400 ரூபாய்க்கு ஏலம் சென்றது.இப்பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி செடிகள், கடந்த, மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையால், காய்ப்புத்திறன் குறைந்துள்ளது. அறுவடை செய்த தக்காளியை, தினசரி மார்க்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டு வந்தனர்.அங்கு, நடந்த ஏலத்தில், கேரளா மற்றும் உள்ளூர் வியாபாரிகளிடையே, தக்காளி ஏலம் எடுப்பதில் போட்டி ஏற்பட்டது. இதன் காரணமாக, 12 கிலோ எடையுடன் கூடிய தக்காளி பெட்டி ஒன்று, அதிகபட்சமாக 400 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தில், 12 கிலோ எடையுடன் கூடிய தக்காளி பெட்டி ஒன்று, அதிகபட்சமாக 250 ரூபாய்க்கு ஏலம் சென்றது. எனவே, கடந்த வாரத்தை காட்டிலும், பெட்டி ஒன்றுக்கு 150 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.கிணத்துக்கடவு பகுதி மட்டுமில்லாமல், கர்நாடாக, ஆந்திரா மாநிலங்களிலும் மழை காரணமாக, தக்காளி வரத்து இல்லை. இதனால், தக்காளிக்கு விலை உயர்ந்துள்ளது. ஒருபுறம் மழையின் காரணத்தால் பயிரும், பழங்களும் அழுகும் ஆபத்து உள்ளது. எனினும், விலை உயர்வால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X