எஸ்டேட்களில் யானைகள் 'விசிட்': சுற்றுலா பயணிகள் 'அப்செட்'

Added : டிச 03, 2019
Advertisement

வால்பாறை:சுற்றுலா தலங்களில், யானைகள் முகாமிட்டுள்ளதால், வால்பாறை வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, நாள் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். வடகிழக்கு பருவ மழை சாரல் மழையாக பெய்த நிலையில், குளு, குளு காற்று வீசுவதாலும், இதமான காலநிலை உள்ளது.இந்நிலையில், சுற்றுலாபயணிகள் அதிகம் செல்லும் சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நெம்பர்பாறை உள்ளிட்ட பகுதிகளில், நேற்று யானைகள் முகாமிட்டன. எனவே, சுற்றுலா பயணிகள் செல்ல, வனத்துறையினர், திடீர் தடை விதித்தனர். இதனால் பல்வேறு பகுதியிலிருந்தும் வால்பாறை வந்துள்ள சுற்றுலாபயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது,சீதோஷ்ண நிலை மாற்றத்தால், யானைகள் வருகை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குறிப்பாக, வில்லோனி, பன்னிமேடு, முருகாளி, வெள்ளமலை, அய்யர்பாடி, சின்கோனா, சின்னக்கல்லார், நல்லமுடி உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன. எனவே, யானைகள் நடமாடும் பகுதியில் சுற்றுலா பயணிகள் யாரும் செல்லக்கூடாது. குறிப்பாக, யானைக்கு மிக அருகில் சென்று 'செல்பி' எடுக்க கூடாது. மீறினால், வன உரியின பாதுகாப்பு சட்டப்படி அவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X