பொது செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் உத்தரவு எதிரொலி: பி.டி.ஏ., தலைவர் ராஜினாமா

Added : டிச 03, 2019
Advertisement

பொள்ளாச்சி:தமிழக கல்வி அமைச்சரின் உத்தரவுப்படி, சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர், தனது பதவியை ராஜினமா செய்தார்.தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இரு நாட்களுக்கு முன், மாவட்டகல்வி அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில், பெற்றோர் ஆசிரியர் கழகம் என்பது மாணவர்களின் கல்வி முன்னேற்றம், பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என தெரிவித்ததோடு, பெரும்பாலானோர் பள்ளியின் செலவில் டீ குடித்தும், வேண்டியவர்களை பள்ளிக்கு வரவழைத்து, தங்களது சொந்தக் காரியங்களை முடித்துக்கொள்வதிலும் உள்ளனர்.எனவே, தங்களது குழந்தை படிக்காத பள்ளியில், ஒருவர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக இருக்ககூடாது. தமிழக பள்ளிகளில் செயல்படும் பெற்றோர் - ஆசிரியர் கழகத்தினை கலைக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.இதன் எதிரொலியாக, சுயநலம் பாராமல், பெற்றோர் - ஆசிரியர் கழக தலைவராக பள்ளியின் வளர்ச்சியில் அதிக ஈடுபாடு கொண்ட பலர் வருத்தம் அடைந்துள்ளனர். இவர்களில், நெகமம் அடுத்துள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக, இதுநாள் வரை இருந்த சுந்தரசாமி, தனது பதவியை ராஜினாமா செய்து, மாவட்ட கல்வி அதிகாரிக்கு கடிதம் அனுப்பினார்.கடந்த, சில ஆண்டுகளில், இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட, மாநில அளவில், முதல் இரண்டு மதிப்பெண் பெற்றதும், விளையாட்டு போட்டிகளில், பரிசுகள் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X