பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலக அமைவிடம் குறித்து பரவும் செய்திக்கு நடவடிக்கை தேவை

Added : டிச 03, 2019
Advertisement

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் நலச்சங்கம் சார்பில் அளித்த மனு:கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் அமைவிடம் தொடர்பாக ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வீரசோழபுரம் எல்லையில் கலெக்டர் அலுவலகம் அமைவது குறித்து வரைபடம் ஒன்று வேகமாக பரவி வருகிறது.இதனை பயன்படுத்தி, ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நபர்கள், அதன் அருகிலுள்ள இடங்களுக்கு மார்க்கெட் மதிப்பை உயர்த்தி விற்பனை செய்ய முயற்சிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் வேறு இடங்களில் அமைக்கப்படும் நிலையில், அதனை நம்பி முதலீடுகள் செய்யும் பொதுமக்களுக்கு பெருத்த கஷ்டம் மற்றும் நஷ்டத்தை உண்டாக்கும். எனவே, கலெக்டர் அலுவலகம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X