பொது செய்தி

தமிழ்நாடு

போராட்டம் நடத்தியும் சீரமைக்காத சாலை அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி

Added : டிச 03, 2019
Advertisement
 போராட்டம் நடத்தியும் சீரமைக்காத சாலை அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தி

கச்சிராயபாளையம்:கச்சிராயபாளையத்தில் சேதமான சாலையை உடனடியாக சீரமைக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளி்த்தும் இதுவரை சீரமைக்காததால் பொதுமக்கள் அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
கச்சிராயபாளையம் அடுத்த கல்வராயன் மலை அடிவாரத்தில் கல்படை, மல்லிகைபாடி, பரங்கிநத்தம் போன்ற கிராமங்களில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கோமுகி அணையிலிருந்து மல்லிகைபாடி வரை செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால் இந்த சாலையில் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. மேலும் மோசமான சாலையால் இப்பகுதிக்கு செல்லும் அரசு பஸ்களும் சரிவர இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கல்படை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் மட்டும் உள்ளதால் மழைக் காலங்களில் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஆற்றைக் கடந்து செல்வதில் சிரமம் உள்ளது.பழுதான சாலையை சீரமைக்க கோரியும், கல்படை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதி மக்கள் பல முறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் இல்லை.இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கோமுகி அணை அரச மரம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்று கோமுகி அணை நீர் திறப்பிற்காக அமைச்சர், கலக்டர் உள்ளிட்டோர் அங்கு வந்திருந்த நிலையில் சின்னசேலம் தாசில்தார் மற்றும் டி.எஸ்.பி., ஆகியோர் உங்கள் கோரிக்கையை விரைந்து சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனைத் தொடர்ந்து 3 மணி நேர மறியல் வாபஸ் பெறப்பட்டது.ஆனால், ஒரு மாதமாகியும் சாலையை சரி செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X