பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பருவமழையால் தேவை குறைவு: தடுமாறும் தடுக்கு!.ஓலைகள் கிடைக்காமல் தயாரிப்பும் கடும் சரிவு

Added : டிச 03, 2019
Advertisement

ஆனைமலை:பொள்ளாச்சிசுற்றுப்பகுதிகளில், பருவமழை காரணமாக, தென்னை ஓலைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, தென்னந்தடுக்கு தயாரிப்பு பாதித்து உள்ளது; மழையால் தமிழக அளவில் தேவையும் குறைந்துள்ளது.பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், ஒரு லட்சத்து, 44 ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது; சுமார் ஒரு கோடி தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மரத்தில் இருந்து வீணாகும் தென்னை ஓலையில், தடுக்குகள் தயாரிக்கப்படுகிறது.கோடை கால வெயிலை சமாளிக்க வீட்டின் மேற்கூரையில் அமைக்கவும், சுப நிகழ்ச்சிகளுக்கும், குடிசை அமைக்கவும், தென்னந்தடுக்கு பயன்படுகிறது. கோழிப்பண்ணை, டீ எஸ்டேட்டுகளில் மறைப்பு கட்டவும், வெங்காயம் சாகுபடி செய்யும் பகுதிகளிலும், தடுக்கு தேவைப்படுகிறது.பொள்ளாச்சி பகுதிகளில் தயாராகும் தடுக்குகள், தஞ்சை, நாகப்பட்டிணம், திருவாரூர், சீர்காழி, சிதம்பரம், பெரம்பலுார், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. செங்கல் சூளைகளுக்காக, கேரளாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.தடுக்கு பிண்ணுவது, பாரம் ஏற்றுவது, தென்னை ஓலை எடுப்பது என, நேரடியாகவும், மறைமுகமாகவும் தினமும், 700க்கும் மேற்பட்டோர், இத்தொழிலில் ஜீவனம் செய்து வருகின்றனர்.தடுக்கு தயாரிப்பில் ஈடுபட்ட பலரும், வேறு வேலைகளுக்கும் சென்று வருகின்றனர். மழை குறைந்தால் மட்டுமே, தென்னந்தடுக்கு உற்பத்தியும், தடுக்குக்கான தேவையும் மீண்டும் பழைய நிலையை அடையும்.வேட்டைக்காரன்புதுார் தென்னந்தடுக்கு விற்பனையாளர் நடராஜ் கூறியதாவது:ஆண்டுதோறும், பிப்., முதல் ஆக., வரை கோடை காலத்தில், தென்னை மரங்களில் இருந்து அதிக ஓலைகள் விழும். நவ., முதல் ஜன., வரை மழைக்காலத்தில், குறைவாக கிடைக்கும். தற்போது பனிக்காலம் நிலவுவதால், ஓலைகள் வரத்து குறைந்துள்ளது.மழையால், தமிழகத்தில் தடுக்குக்கான தேவை குறைந்துள்ளது. தற்போது, கேரளா பகுதி செங்கல் சூளைகளுக்கும், சத்தியமங்கலம் பகுதி கோழி பண்ணைகளுக்கும் மட்டுமே தடுக்கு அனுப்பப்படுகிறது.தற்போது, தென்னை ஓலை, ஒரு சரக்கு வாகன லோடு, விவசாயிகளிடம் இருந்து, இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கப்படுகிறது; இந்த ஓலையைக் கொண்டு, ஆயிரம் தடுக்குகள் தயாரிக்க முடியும். தடுக்கை இரண்டாக கிழிப்பது, பிண்ணுவது, பாரம் ஏற்றுவது என, ஆயிரம் தடுக்குகளுக்கு, 1,500 ரூபாய் செலவாகிறது.எட்டாயிரம் தடுக்குகள், விவசாயிகளிடம் இருந்து வாங்கி, விற்பனை செய்தால் வியாபாரிகளுக்கு, நான்காயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. வியாபாரிகளுக்கு விற்பதால், விவசாயிகளுக்கும் எட்டாயிரம் தடுக்குக்கு, நான்காயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இவ்வாறு தெரிவித்தார்.சீசன் இல்லை!ஜன., முதல் செப்., வரையில் தென்னந்தடுக்குக்கான தேவை அதிகமாக இருக்கும். அப்போது, பொள்ளாச்சியில் இருந்து தினமும், 20 லோடு வரை தடுக்குகள், பல பகுதிகளுக்கும் அனுப்பப்படும். தற்போது, சீசன் இல்லாததால் தினமும், மூன்று முதல் ஐந்து லோடு வரை மட்டுமே செல்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X