பொது செய்தி

தமிழ்நாடு

ஏமாற்றம்! முதன் முதலாக குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்கள்...தேர்தல் நன்னடத்தை விதியால் பெட்டியில் மனுக்களை போட்டனர்

Added : டிச 03, 2019
Advertisement
 ஏமாற்றம்! முதன் முதலாக குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்க வந்தவர்கள்...தேர்தல் நன்னடத்தை விதியால் பெட்டியில் மனுக்களை போட்டனர்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் நேற்று முதல் இயங்கியதையடுத்து, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் மனு அளிக்க குவிந்ததால் அலுவலக வளாகம் களைகட்டியது.

ஆனால், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பால் தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததால் பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக மனுக்களை வழங்க முடியாமல் பெட்டியில் போட்டுச் சென்றனர்.கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டு, புதிய மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி கடந்த 26ம் தேதி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக கச்சிராயபாளையம் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டி வளாக கட்டடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் இயங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் துவங்கியதையடுத்து, வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என கலெக்டர் கிரண் குராலா அறிவித்திருந்தார்.அதன்படி முதன் முதலாக கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று துவங்கிய குறைகேட்பு கூட்டம் கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என பல்வேறு தரப்பு மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் மனு அளிக்க வருகை புரிந்தனர். பொதுமக்கள் மனுக்கள் எழுத அலுவலக நுழைவு வாயில் பகுதியில் ஷாமியானா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. நகராட்சி மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கலெக்டர் அலுவலகம் உள்ள கச்சிராயபாளையம் சாலையில் ஓட்டல்கள், டீ கடைகள், ஜெராக்ஸ் கடைகள் என பல்வேறு இடங்களில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பிலிருந்து ஆட்டோ போக்குவரத்தும் அதிகமாக காணப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில், தமிழக தேர்தல் ஆணையம் நேற்று காலை உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. இதனால், தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்தது. இதன் காரணமாக கலெக்டர் கிரண்குராலா பொதுமக்களிடமிருந்து மனுக்களை நேரடியாக பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
உடனடியாக, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை அளிப்பதற்கு பெட்டி அமைக்கப்பட்டது. அதில், பொதுமக்கள் மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் முதன் முதலாக கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க ஆர்வமுடன் வந்த பொதுமக்கள், மாற்றுத் திறனாளிகள், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பால், கலெக்டரிடம் நேரடியாக மனு அளிக்க முடியாமல் பெட்டியில் போட்டு விட்டு ஏமாற்றத்துடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X