பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே மண்டபம்; இரண்டு தேர்தல்: ஆளுங்கட்சியினர் பலே 'பிளான்'

Added : டிச 03, 2019
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், ஒரே அம்மா திருமண மண்டபத்தை காட்டி, இரண்டு தேர்தல்களில் ஓட்டுகளை கவர, ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக, விமர்சனங்கள் எழுந்துள்ளன.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த, 2016ம் ஆண்டு நடப்பு நிதியாண்டில், 1,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் 50,000 குடியிருப்புகள் கட்டுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.அதில் ஒரு பகுதியாக, ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என அறிவித்தார். இந்த திட்டம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் செயல்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. அதற்காக, முதல்கட்ட நிதியாக, 83 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 11 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால், அதில் முதலில் பொள்ளாச்சி இடம் பெறவில்லை. திட்டம் செயல்படுத்தும் முன்பே ஜெயலலிதா மறைந்தார்.இந்நிலையில், அடுத்து ஆட்சிக்கு வந்த அவர் கட்சியினர், ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என தெரிவித்தனர்.அதன் தொடர்ச்சியாக, கடந்த, 2018ல் பொள்ளாச்சி - கோவை ரோட்டில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே இடம் ஒதுக்கப்பட்டு, அம்மா திருமண மண்டபம் கட்டும் பணி துவங்கப்பட்டது. இதற்கு பொள்ளாச்சி எம்.பி., தன் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து, 75 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.கட்டுமான பணிகள் முழுமையடையும் முன்பே, கடந்த மார்ச்சில், லோக்சபா தேர்தல் வந்தது. தேர்தல் அறிவிக்க சில நாட்கள் முன்பு, அவசர அவசரமாக அம்மா திருமண மண்டபத்துக்கு திறப்பு விழா நடத்தப்பட்டது. லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், திருமண மண்டபம் திறந்ததும் சாதனையாக கூறி ஓட்டு சேகரிக்கப்பட்டது.ஆனால், தேர்தல் முடிந்து, 10 மாதங்கள் ஆகியும், இதுவரை திருமண மண்டபம் மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படவில்லை. கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டாலும், ஆமை வேகத்தில் வர்ணம் பூசும் பணிகள் நடக்கின்றன.இதை காணும் எதிர்கட்சிகள், 'அம்மா மண்டபத்தை காட்டி லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்தது போலவே, அறிவிக்கப்பட்டுள்ள உள்ளாட்சி தேர்தலிலும் பிரசாரம் செய்ய ஆளுங்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். அதனால் தான் பயன்பாட்டுக்கு விடாமல் வைத்துள்ளனர். ஒரே மண்டபத்தை காட்டி, இரண்டு தேர்தலை சந்திக்க நினைக்கிறார்கள் பலே ஆசாமிகள்,' என விமர்சிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X