பொது செய்தி

தமிழ்நாடு

செஞ்சியில் தொடர் மழையால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

Added : டிச 03, 2019
Advertisement

செஞ்சி:செஞ்சி பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வட கிழக்கு பருவ மழை துவங்கியதில் இருந்து தொடர் மழை பெய்து வருவதால், செஞ்சி ஒன்றியத்தில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. மேலும், தொடர் மழையால், செஞ்சி பகுதியில் உள்ள பெரிய ஏரிகளான சென்னாலுார், அன்னமங்கலம், பொன்பத்தி, காரியமங்கலம், வல்லம் உள்ளிட் 100க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.இதனால் வராக நதியிலும் சங்கராபரணி ஆற்றிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலச்சேரி வராக நதி தரைப் பாலம், செஞ்சி மேல்களவாய் தரைப்பாலத்தில் வெள்ளம் ஏற்பட்டு போக்கு வரத்து தடைபட்டுள்ளது.இதனால் இந்த வழியாக சென்று வந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சுற்று வழியில் செஞ்சிக்கு வருகின்றனர்.மேல்மலையனுார் அடுத்த தொரப்பாடி கிராமத்தில் 50 ஏக்கர் அளவிற்கு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.செஞ்சியில் திருவண்ணாமலை ரோட்டில் உள்ள பி ஏரி நிறைந்து ஏரிக்கு மேல் பகுதியில் உள்ள முருகன் கோவில் மற்றும் முல்லை நகரில் மழை நீர் சூழ்ந்தது. மழையின் காரணமாக வரிக்கல் கிராமத்தில் 4 கூரை வீடுகளும், மேல்அருங்குணம் கிராமத்தில் 3 கூரை வீடுகளும், கவரை கிராமத்தில் 1 ஒரு ஓட்டு வீடும் இடிந்து சேதமாகியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X