பொது செய்தி

தமிழ்நாடு

திறப்பு! வீடூர் அணையில் உபரி நீர்...பாதுகாப்பு கருதி நடவடிக்கை

Added : டிச 03, 2019
Advertisement
 திறப்பு! வீடூர் அணையில் உபரி நீர்...பாதுகாப்பு கருதி நடவடிக்கை

விக்கிரவாண்டி:விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக வீடூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதிஅணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த தொடர் கனமழை காரணமாக விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணைக்கு நீர் வேகமாக வந்து கொண்டிருக்கிறது.செஞ்சி, பாக்கம் மற்றும் மேல் மலையனுாரில் பெய்த மழை நீர் தொண்டியாற்றிலும், ரெட்டணை பகுதியில் பெய்த மழை நீர் வராகநதி வழியாகவும் கடந்த 2 நாட்களாக வினாடிக்கு 1,200 கன அடி நீர் வரத்து இருந்து வந்தது.அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியியை (605 மில்லியன் கன அடி) நேற்று முன்தினம் நள்ளிரவு 12:15 மணிக்கு எட்டியது. அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகின்ற சங்கராபரணி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை விடப்பட்டது.அணை முழு கொள்ளவை எட்டியதை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை ஆற்றில் திறந்து விட கலெக்டர் அண்ணாதுரை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு 12:20 மணிக்கு அணைக்கு வந்து கொண்டிருந்த நீர் வினாடிக்கு 1,200 கன அடி உபரி நீரை அணையில் உள்ள 9 ஷட்டர்களில் 3 ஷட்டர்கள் திறந்து சங்கராபரணி ஆற்றில் விடப்பட்டது.நேற்று காலை 11:00 மணியளவில் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வினாடிக்கு 1,500 கன அடி நீர் வரத்து வந்ததால், அணையில் மேலும் 2 ஷட்டர்களைத் திறந்து 5 ஷட்டர்கள் 2,000 கன அடி தண்ணீர் சங்கராபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

மேலும் பாசன வாய்க்காலுக்குச் செல்லும் மதகினை திறந்து சிறிதளவு கால்வாய் வழியாகவும் உபரி தண்ணீரை வெளியேற்றப்பட்டது. அணையில் தண்ணீர் முழுமையாக நிரம்பி கடல் போல் காணப்படுகிறது. நேற்று காலை விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வீடூரைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அணையை பார்வையிட்டனர். இளைஞர்கள், பெண்கள் ஆர்வமுடன் செல்பி எடுத்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

நேற்று மதியம் 12:00 மணியளவில் கலெக்டர் அண்ணாதுரை அணையிலிருந்து உபரி நீர் வெளியேறுவதை பார்வையிட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஆலோசனை வழங்கினார்.செயற்பொறியாளர் ஜவஹர், உதவி செயற்பொறியாளர் சுமதி, உதவி பொறியாளர் ஞானசேகரன், திண்டிவனம் தாசில்தார் பொறுப்பு செல்வகுமார், இன்ஸ்பெக்டர் ஜோதி, சப் இன்ஸ்பெக்டர்கள் அய்யனாரப்பன், முருகேசன் உடனிருந்தனர்.பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை, காவல் துறையினர் அணையில் முகாமிட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 2015ம் ஆண்டு இதே போன்று அணை முழு கொள்ளளவை எட்டியதில், இதேபோன்று டிசம்பர் 2ம் தேதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 2015ம் ஆண்டிற்கு பிறகு தற்போது 2019ல் அணை நிரம்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X