பொது செய்தி

தமிழ்நாடு

கோவாவுக்கு 'சிக்குபுக்கு' திருப்பூர் பயணிகள் ஏமாற்றம்

Added : டிச 03, 2019
Share
Advertisement
திருப்பூர்:'ஐ.ஆர்.சி.டி.சி.,யின் கோவா சுற்றுலா ரயில் திருப்பூரில் நிற்காது,'என்ற அறிவிப்பு பயணிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.ரயில் பயணிகளை ஈர்க்க இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) அவ்வப்போது சுற்றுலா ரயில்களை இயக்குகிறது. நாளை மறுதினம் (5ம் தேதி) மதுரையில் இருந்து சேலம், கோவை வழியாக கோவாவுக்கு ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில், கொல்லுார்

திருப்பூர்:'ஐ.ஆர்.சி.டி.சி.,யின் கோவா சுற்றுலா ரயில் திருப்பூரில் நிற்காது,'என்ற அறிவிப்பு பயணிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.ரயில் பயணிகளை ஈர்க்க இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) அவ்வப்போது சுற்றுலா ரயில்களை இயக்குகிறது. நாளை மறுதினம் (5ம் தேதி) மதுரையில் இருந்து சேலம், கோவை வழியாக கோவாவுக்கு ரயில் இயக்கப்படுகிறது.இந்த ரயில், கொல்லுார் மூகாம்பிகை அம்மன் கோவில், உடுப்பி கிருஷ்ணர் முருடேஸ்வர், சிருங்கேரி சாரதா பீடம், ேஹாராநாடு அன்னபூரணி தர்மசாலா மஞ்சுநாதர் உள்ளிட்ட கோவில்களுக்கு ஒரு பிரிவாக பயணிக்கிறது.மற்றொரு பிரிவாக, கோவா சர்ச் மற்றும் கடற்கரை பகுதியில் உள்ள ஸ்டேஷன்களுக்கும் செல்கிறது. ரயிலில் கோவில்களுக்கு பயணிக்க தனிநபருக்கு, 6,930 ரூபாய் கட்டணம், கோவா சுற்றுலாவுக்கு, 4,725 ரூபாய் கட்டணம் என அறிவிக்கப்பட்டது. வரும் 5ம் தேதி மதுரையில் பயணத்தை துவக்கும் இந்த ரயில், திண்டுக்கல், கரூர் வழியாக ஈரோட்டை அடைந்து, திருப்பூரில் நிற்காமல் கோவை செல்கிறது. அங்கிருந்து போத்தனுார் வழியாக கேரளா மற்றும் கோவா நோக்கி பயணிக்கிறது.ஐ.ஆர்.சி.டி.சி., அறிவிக்கும் பெரும்பாலான ரயில்கள் மதுரையில் புறப்பட்டு ஈரோட்டில் இருந்து காட்பாடி வழியாக வெளிமாநில சுற்றுலா, கோவில்களுக்கு இயக்கப்படுகிறது. ஈரோடு - கோவையை கடந்து செல்லும் வகையில் அறிவிக்கப்பட்ட ஒரு ரயிலும், திருப்பூரில் நின்று செல்லாது என்ற அறிவிப்பு, இங்குள்ள பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X