பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் ஆபீசில் குடிநீர் தொட்டி: 'தினமலர்' செய்தி எதிரொலி

Added : டிச 03, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தரமான குடிநீர் வசதியில்லை என, பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டினர். சுத்திகரிப்பு கருவிகள், கழிவறைகள் அருகே இருப்பதால், குடிநீரை பருக, மக்கள் தயங்குகின்றனர்.பொதுமக்கள் குறைகேட்பு நாளில், குடிக்க தண்ணீர் கிடைக்காமல், பெண்களும், குழந்தைகளும் பரிதவிக்கின்றனர்.மாநகராட்சி சார்பில் அமைத்த, பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியும், பயன்பாடின்றி உள்ளது. மீண்டும், மாநகராட்சி மூலமாக, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் வலியுறுத்தி வந்தனர்.இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழ், கடந்த 26ம்தேதி திருப்பூர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. அதன் எதிரொலியாக, கலெக்டர் விஜய கார்த்திகேயன், கூடுதல் குடிநீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட்டுள்ளார். கலெக்டர் அலுவலகம் முன்புற 'போர்டிகோ' அருகே உள்ள, பிளாஸ்டிக் தொட்டியை சுத்தம் செய்து, மாநகராட்சி மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கும் அரங்கம் அருகே, 'போர்டிகோ'வில், புதிய பிளாஸ்டிக் தொட்டி வைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.நேற்று, கலெக்டர் அலுவலகம் வந்திருந்த மக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல், மாநகராட்சி மூலம், சுத்திகரிக்கப்பட்ட மேட்டுப்பாளையம் குடிநீரை தொடர்ந்து வினியோகிக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X