சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் குளித்த வாலிபர் மாயம்

Added : டிச 03, 2019
Advertisement
 ஆற்றில் குளித்த வாலிபர் மாயம்

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே ஆற்றில் குளித்தபோது மூழ்கிய வாலிபரை தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகன் செல்வம், 26; சென்னையில் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில் தனது நண்பர்கள் 5 பேருடன் தொண்டி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.நண்பர்கள் குளித்து விட்டு கரையேறியபோது, செல்வம் இல்லாததால், அவர் முன்பே சென்றிருக்கக் கூடும் என அனைவரும் வீடு திரும்பினர்.ஆனால், அனைவரும் வீட்டிற்கு சென்ற நிலையில் செல்வம் மட்டும் வீட்டிற்கு செல்லவில்லை. நேற்று காலை வரை திரும்பாததால், செல்வம் மனைவி மற்றும் உறவினர்கள் ஆற்றங்கரையில் சென்று தேடியபோது அவரது உடைகள் மட்டும் கிடந்தன.தகவலறிந்த பெரியதச்சூர் போலீசார் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள் நேற்று, ஆற்றில் மூழ்கிய செல்வத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலை 6:00 மணி வரை கிடைக்காததால் அனைவரும் திரும்பிச் சென்றனர். மீண்டும் இன்று தேடும் பணியில் ஈடுபட உள்ளனர்.இதுகுறித்து பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X