பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

Added : டிச 03, 2019
Advertisement

வீடூர் அணையில் உபரி நீர் வெளியிடப்படுவதை மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., மாசிலாமணி நேற்று நேரில் பார்வையிட்டு அதிகாரியிடம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது நிருபர்களிடம் கூறுகையில், 'அணையில் முழு கொள்ளளவை அடையாத நிலையில் வீணாக வெளியேற்றப்படுகிறது. வீடூர் அணையின் ஆழம் 36 அடி ஆகும். ஆனால் நீண்ட காலமாக துார் வாராததால் நீர்பிடிப்பு பகுதி குறைந்து 28 அடியாக உள்ளது. துார் வாரியிருந்தால் இங்கு வெளியேற்றப்படும் நீர் அணையில் தங்கி விவசாயத்திற்கு பயன்பட்டிருக்கும். அணையை துார்வார வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அதற்கு இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை.இதன் காரணமாக மழைநீரை சேமிக்க முடியாமல் உபரி நீராக வெளியேற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி வழியாகவும் நீர் வீணாக வெளியேறுகிறது. எனவே இதனை எல்லாம் சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X