பொது செய்தி

தமிழ்நாடு

மார்க்கெட்டுக்கு வெளியே ஈர்க்கும் மீன் வியாபாரம்: சுகாதார குறைவு; 'கடல் மீன்' என மோசடி விற்பனை?

Added : டிச 03, 2019
Advertisement

திருப்பூர்:தென்னம்பாளையத்தில் மீன் மார்க்கெட் செயல்படுகிறது. தமிழகம், ஆந்திரா, கேரளா கடலோர பகுதியில் இருந்து, 40 டன் மீன் விற்பனைக்கு வருகிறது. 15 கன்டெய்னரில் வரும் மீன்களை வியாபாரிகள் இறக்கி விற்கின்றனர். மாநகராட்சி சுகாதாரப்பிரிவின் அறிவுறுத்தலை பின்பற்றி, சுகாதாரம் பேணப்பட்டு இங்கு மீன்கள் விற்கப்படுகிறது.ஞாயிறு வார விடுமுறை நாட்களில் இங்கு வாடிக்கையாளர் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
காத்திருக்கும் வாடிக்கையாளரை ஈர்க்க மார்க்கெட்டுக்கு வெளியே, பல்லடம் ரோடு தென்னம் பாளையம் ஸ்டாப்பில், ஏ.பி.டி., ரோட்டில் மீன்கள் விற்கப்படுகிறது. பத்து முதல், 30க்கும் அதிகமான வியாபாரிகள் சாக்கு பை விரித்து அப்ப டியே மீன் விற்கின்றனர்.சாக்கடை கால்வாய் ஓரத்தில், போதிய தண்ணீர் இல்லாமல், சுத்தமாக கழுவாமல் மீன்கள் அப்படியே விற்கப்படுகிறது. பறக்கும் புழுதி மணலை கண்டுகொள்ளாமல், உரித்த கோழிகள் அப்படியே வெட்டி விற்கப்படுகிறது.மீன் வியாபாரிகள் கூறுகையில், 'கடைகளுக்கு உரிமம் பெற்று, மாநகராட்சியிடம் வாடகை செலுத்தி, மூன்று மாநில கடல் பகுதியில் இருந்து மீன்களை வாங்கி சேமித்து வைத்து விற்பனை செய்கின்றனர்.
டேம் மீன்களை கடல் மீன்கள் எனக்கூறி தெருவோரத்தில் மீன் விற்கின்றனர். சுத்தமாக இவை கழுவி கொடுப்பதில்லை. சுகாதாரக்கேடாக உள்ளது,' என்றனர்.விலை குறைவு என்பதால், வாடிக்கையாளர்கள் ஈர்ப்பை ரோட்டோர மீன்கள் பெற்றுள்ளது. அதே நேரம் இவை சுகாதாரம் பேணப்படுகிறதா என்பது கேள்விகுறியே. இவ்வாறு நடக்கும் விற்பனை குறித்து, உணவு பாதுகாப்பு அலுவலர் விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X