பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் 'பூட்டு' போட்டாலும் ஸ்கூட்டி 'சாவி' கொடுத்தாச்சு

Added : டிச 03, 2019
Advertisement
 தேர்தல் 'பூட்டு' போட்டாலும் ஸ்கூட்டி 'சாவி' கொடுத்தாச்சு

திருப்பூர்:திடீரென உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட தால், கலெக்டர் அலுவலகம் வந்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆரவாரமின்றி, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டிகள் வழங்கப்பட்டன.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்குமென, வழக்கம் போல் மனுகொடுக்க, கலெக்டர் அலுவலகத்துக்கு மக்கள் வந்திருந்தனர். குறைகேட்பு ரத்தானதால், மனுக்கள் பெட்டியில் மனுக்கள் சேகரிக்கப்பட்டன.தமிழ்நாடு தியாகி குமரன் பொது தொழிலாளர் சங்க தலைவர் ராஜசேகர் கொடுத்த மனுவில், 'தமிழக அரசு வழங்கியுள்ள, இலவச வீட்டுமனை பட்டா நிலத்தை, மூன்று நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஏழைகள் நிலத்தை மீட்டுத்தர வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.குடிமங்கலம் ஒன்றியம், ஆத்துகிணத்துப்பட்டி மக்கள் கொடுத்த மனுவில், 'இலவச கறவை மாடு திட்டத்தில், 50 பேருக்கு வழங்கியுள்ளனர். இருப்பினும், தகுதியான ஏழை பயனாளிகள் விடுபட்டுள்ளனர். தகுதியானவர்களுக்கு கறவை மாடு வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.கோவில்வழி புதுபிள்ளையார் நகர் மக்கள் கொடுத்த மனுவில், 'புது பிள்ளையார் நகரில், 'ரிசர்வ்' சைட் இடத்தில், தண்ணீர் தொட்டி கட்டப்படுகிறது. ஏற்கனவே தொட்டி இருப்பதால், ரேஷன் கடை, அங்கன்வாடி போன்ற கட்டடங்களை கட்ட வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில், 'மின்கோபுரம் அமைக்கும் பணிக்காக, எடுக்கப்படும் விவசாய நிலங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும். மற்ற மாவட்டங்களை போல், அதிகபட்ச மதிப்பில் இருந்து, 25 சதவீதம் சேர்த்து வழங்க வேண்டும். எடுக்கப்படும் நிலம் விவரம், அவற்றின் மதிப்பு ஆகியவிவரத்தை தெரிவித்து, தொகையை ஒதுக்கிய பிறகே, நிலத்தில் பணியை செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.இடுவாய் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், 'வருவாய்த்துறை மூலம், இடுவாயில் மனை வழங்கப்பட்டது. ஏற்கனவே பட்டா வாங்கியவர்கள், வீடு கட்டாமல் இருந்ததால், பட்டாவை ரத்து செய்து, எங்களுக்கு மனை வழங்கினர். எங்களுக்கு பட்டா வழங்கிய பிறகு, முன்பு பட்டா பெற்றவர்கள் வீடு கட்ட வருகின்ற னர். எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தலா, 58 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டிகளை, 10 பயனாளிகளுக்கு வழங்க, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தேர்தல் அறிவிப்பால், குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து, மாற்றுத்திறனாளிகள்வந்து விட்டதால்,ஸ்கூட்டிகள் ஆரவாரமின்றி வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X