பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவு பணி மேற்கொள்ளும் பணியாளர்கள்

Added : டிச 03, 2019
Advertisement
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி துப்புரவு பணி மேற்கொள்ளும் பணியாளர்கள்

உளுந்துார்பேட்டை:உளுந்துார்பேட்டை பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி துாய்மைப்பணியில் ஈடுபடுவதால் அவர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

உளுந்துார்பேட்டை தேர்வு நிலை நிலை பேரூராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களில் 27 பேர் நிரந்தர பணியாளர்கள், 65 பேர் தற்காலிக பணியாளர்கள் என 92 துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களை மேற்பார்வையிட இரு மேற்பார்வையாளர்கள் உள்ளனர்.இவர்கள் தெருக்களில் உள்ள குப்பைகளை அள்ள கையுறை, காலணி, மாஸ்க் என போதிய உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் வேறுவழியின்றி வெறும் கைகளால் குப்பைகளை அள்ளி துப்புரவு பணியை மேற்கொள்கின்றனர். இதனால், அவர்களுக்கு தொற்று நோய்கள் ஏற்பட காரணமாகிறது.மழைக் காலங்களில் மழையில் நனையாமல் இருப்பதற்கான ரெயின்கோட் கூட வழங்கப்படவில்லை. இதனால், மழையில் நனைந்தபடி துப்புரவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பல்வேறு திட்டங்களுக்கு நிதியை செலவிடும் பேரூராட்சி நிர்வாகம் ஏனோ பேரூராட்சி துப்புரவு பணியாளர்களைக் கண்டுகொள்வதில்லை. அலுவலகங்கள் உள்ளிட்ட அதிகாரிகள் வரை வெளியே செல்வதற்கும், அலுவலக உபகரணங்கள் வாங்குவதற்கு செலவிடும் தொகையில் சிறிதளவு கூட துப்புரவு பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கி கொடுப்பதற்கு முன் வருவதில்லை.
துப்புரவு பணியாளர்கள் கீழ் மட்ட பணியாளர்கள் என்பதாலோ என்னவோ அதிகாரிகளும் அவர்களின் நிலையை உணர்ந்து கொள்வதில்லை.இதனால் துப்புரவு பணியாளர்கள் பாலித்தீன் கவர்களை கையுறையாக பயன்படுத்தி குப்பைகளை அகற்றி வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் துப்புரவு பணியாளர்களின் இந்த நிலையை மாற்ற, தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X