'ஓய்வு' எடுக்கும் ஏ.சி., ஓய்வறை ரயில்வே ஸ்டேஷனில் அவலம்

Added : டிச 03, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் ஏ.சி., ஓய்வறை கட்டணம் ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டு, 25 ரூபாயாகியுள்ளது. பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்போர் வசதிக்காக, திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் இரண்டாவது பிளாட்பார்மில் ஏ.சி., ஓய்வறை அமைக்கப்பட்டது. துவக்கத்தில் பயணி ஒருவருக்கு ஒரு மணி நேரத்துக்கு, 15 ரூபாயாக இருந்த நுழைவு கட்டணம். அடுத்த ஓரிரு மாதத்தில், 17 ரூபாயாக உயர்த்தப்பட்டு பின், 20 ரூபாயை எட்டி பிடித்தது.இருபது ரூபாய் கட்டணத்துக்கு தினமும் நுாற்றுக்கும் குறைவானவர்களே ஏ.சி., ஓய்வறையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கட்டணத்தை மேலும் ஐந்து ரூபாய் உயர்த்தி, 25 ரூபாயாக ரயில்வே அலுவலர்கள் மாற்றியுள்ளனர். இது குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏ.சி., ஓய்வறை பூட்டியே கிடக்கிறது.விரல் விட்டு எண்ணக்கூடிய பயணிகளே கட்டணம் செலுத்தி உள்ளே செல்கின்றனர். பெரும்பாலான நேரங்களில் ஒரே ஒரு பாதுகாவலருடன் பள பள வென பயணிகள் இல்லாமல் காட்சி தருகிறது ஏ.சி., ஓய்வறை.'பயணிகள் கட்டணத்தை குறைத்தால், நடுத்தர பயணிகளும் ரயில் வரும் வரை ஏ.சி., ஓய்வறையில் காத்திருப்பர். சேலம் ரயில்வே கோட்டம் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும்,' என ரயில் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X