புது ரூட்டுல பறக்குது பஸ்; பயணிகள் தவிப்பு

Added : டிச 03, 2019
Advertisement

திருப்பூர்:திருப்பூரில் பயணிகளை ஏமாற்றி வழித்தடம் மாறி பயணிக்கும் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வட்டார போக்குவரத்து துறையினர், போலீசார் தயக்கம் காட்டுகின்றனர்.திருப்பூர் சபாபதிபுரம் (டி.எம்.எப்.,) பாலம் பணிக்காக, ஊத்துக்குளியில் இருந்து திருப்பூர் வரும் பஸ்கள் இரண்டாவது ரயில்வே கேட்டில் இருந்து அண்ணாநகர், கே.பி.என்., காலனி வழியாக வளம் பாலம் சென்று, வளர்மதி ஸ்டாப்பில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல போலீசாரால் அறிவுறுத்தப்பட்டது.அதன்படியே பஸ்கள் சென்று வந்தன. பாலம் பணி நிறைவு பெற்று போக்குவரத்து சீராகி, ஓராண்டாகி விட்டது. இருப்பினும், 'பீக்ஹவர்ஸில்' பெரும்பாலான பஸ்கள் முதல் ரயில்வே கேட், திருப்பதி கோவில்,டி.எம்.எப்., ரயில்வே ஸ்டேஷன், டவுன் ஹால் வழியாக குமரன் ரோட் டுக்கு வராமல், பழைய இரண்டாவது ரயில்வே கேட் வழியாக வளம் பாலத்தை அடைகிறது.இதனால், பஸ் வருமென எதிர்பார்த்து ஊத்துக்குளி ரோட்டில் காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். நடுவழியில் பஸ் விட்டு இறங்கி வேலை பார்க்கும் நிறுவனங்களுக்கு நடந்து செல்கின்றனர்.பள்ளி மாணவியர் தவிப்புஊத்துக்குளி, செங்கப்பள்ளி, விஜயமங்கலத்தில் இருந்து வரும் டவுன் பஸ்களில் ஜெய்வாபாய், நஞ்சப்பா பள்ளிக்கு வர தினமும் நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவ, மாணவியர் வருகின்றனர். பஸ் ரயில்வே ஸ்டேஷன், டவுன்ஹால் ஸ்டாப்புக்கு வந்தால் இவர்கள் அங்கு இறங்கி பள்ளிக்கு நடந்து வர வசதியாக இருக்கும்.மாறாக பஸ் இரண்டாவது ரயில்வே கேட்டுடன் வழித்தடம் மாறி பயணிப்பதால், நடத்துனர்கள் பள்ளி மாணவர்களை நடுவழியில் இறக்கி விடுகின்றனர். அவர்கள் அங்கிருந்து, 1.5 கி.மீ., பள்ளிக்கு நடந்து வர வேண்டியுள்ளது. பஸ் ஸ்டாண்ட் சென்றால் அங்கிருந்து மற்றொரு பஸ்சில் ஏறி ரயில்வே ஸ்டேஷன் வர வேண்டியுள்ளது.வழித்தடம் மாறி பயணிக்கும் அரசு, தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வட்டார போக்குவரத்து துறையினர், போக்குவரத்து போலீசார் அலட்சியம் காட்டுவதால், இது போன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X