ரோடு அல்ல... குளம்! வாகனங்களுக்கு 'நீச்சல்' போட்டி

Added : டிச 03, 2019
Share
Advertisement
திருப்பூர்:முருகம்பாளையம் பகுதியில் ரோட்டில் தேங்கி நிற்கும் மழை நீரால் ரோடு சேறும் சகதியுமாக மாறி, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.பல்லடம் ரோடு, வித்யாலயம் பகுதியிலிருந்து சுண்டமேடு, இடுவம்பாளையம் செல்லும் ரோடு உள்ளது. இதில் வஞ்சிபாளையம் செல்லும் வழியில், லட்சுமி நகர் மெயின் ரோடு பகுதி உள்ளது.இந்த ரோடு ஏறத்தாழ அரை கி.மீ., துாரம் வரை தார் ரோடு

திருப்பூர்:முருகம்பாளையம் பகுதியில் ரோட்டில் தேங்கி நிற்கும் மழை நீரால் ரோடு சேறும் சகதியுமாக மாறி, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.பல்லடம் ரோடு, வித்யாலயம் பகுதியிலிருந்து சுண்டமேடு, இடுவம்பாளையம் செல்லும் ரோடு உள்ளது. இதில் வஞ்சிபாளையம் செல்லும் வழியில், லட்சுமி நகர் மெயின் ரோடு பகுதி உள்ளது.இந்த ரோடு ஏறத்தாழ அரை கி.மீ., துாரம் வரை தார் ரோடு பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதில் சில இடங்கள் பெரியளவிலான குழியாக மாறி விட்டது. அண்மையில் பெய்த மழையால், இந்த குழிகளில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.ரோட்டின் ஓரத்தில் மழை நீர் வடிகால் அமைப்பு இல்லாத காரணத்தால் அப்பகுதியில் சேகரமாகும் மழை நீர் தாழ்வாக உள்ள ரோட்டுக்கு வந்து தேங்கி நிற்கிறது.இதனால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.இப்பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன.இவை தவிர பனியன் தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு சென்று வரும் வாகனங்கள் தினமும் நுாற்றுக்கணக்கில் இந்த ரோட்டைப் பயன்படுத்துகின்றன.குண்டும் குழியுமாகவும், குளம் போல் நீர் தேங்கியும் நிற்பதால், இவ்வழியாகச் செல்வோர் தடுமாறியபடி செல்லும் நிலை உள்ளது.சேதமாகி கிடக்கும் ரோட்டைச் சீரமைக்கவும் ரோட்டின் பக்கவாட்டில் மழை நீர் வடிகால் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X